அந்தக் காலத்து நடிகர்கள் பன்ச் பேசி இருந்தால் எப்படி இருக்கும்? இதோ இப்படி இருக்கும். அவங்க வாய்ஸ்ல கற்பனை பண்ணிப்பாருங்க மக்காஸ்!
எம்.ஜி.ஆர் உதட்டில் வடியும் ரத்தத்தைத் துடைத்தபடி, ‘‘நான் ஏன் மூணு வாட்டி அடி வாங்குறேனு பார்க்குறியா? முதல் அடி கடமைக்கு. ரெண்டாவது அடி கண்ணியத்துக்கு. மூணாவது அடி கட்டுப்பாட்டுக்கு. இப்போ நான் ஓங்கி அடிக்கிறேன். இது கர்லாக்கட்டை உடம்புடா.’’
சிவாஜி உதட்டைச் சுழித்தபடி, ‘‘ஏய்... இந்த சிவாஜி அழுது பார்த்திருப்பே, சிரிச்சிப் பார்த்திருப்பே, அவ்வளவு ஏன் சிரிச்சுக்கிட்டே அழுதுகூட பார்த்திருப்பே. வெறித்தனமா சண்டை போட்டு பார்த்திருக்கியா? பார்க்கிறியா? பார்க்கிறியா?’’
ஜெய்சங்கர்: ‘‘நான் போட்டிருக்கிறது பெல்பாட்டம் பேன்ட்டு. நான்தான்டா தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு. இதைப்பார்த்து ஆகாதீங்கடா காண்டு.’’
நவரசத் திலகம் முத்துராமன் இப்படித்தானே பிழிந்திருப்பார். ‘‘ஏய் நீ ஆரஞ்சுப் பழத்தைத்தான் பிழிஞ்சுருப்பே... நான் அஞ்சாறு பேரைப் பிழிஞ்சவன்டா.’’
மேஜர் சுந்தர்ராஜனுக்கு சொல்லவா வேணும்? ‘‘நான் மேஜர்டா. என்கிட்ட பண்ணாதீங்க பேஜார்டா. எஸ் ஐ யம் தி மேஜர். டோன்ட் மெஸ் வித் மி பேஜார்.’’