Rajini
Rajiniடைம்பாஸ்

Rajini++ : 'if statement EN PERU MANICKAM' -ரஜினியின் பன்ச் வசனங்களால் ஆன ப்ரோக்ராம்மிங் லாங்குவேஜ்!

if else ப்ரோக்ராம்யில் 'ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்', if statementல் 'என் பெரு மாணிக்கம்', else statementல் 'எனக்கு இன்னொரு பெயர் இருக்கு', முடிவில் 'கத்தம் கத்தம்'.
Published on

"லட்சுமி ஸ்டார்ட் ஆகிடு" என்ற வசனத்தைக் கேட்டால் நமக்கு எல்லாம் 'படிக்காதவன்' படம்தான் நமக்கு ஞாபகம் வரும். "லட்சுமி ஸ்டார்ட்" என்ற வசனம் காரை மட்டுமல்ல, இபோது ஒரு ப்ரோகிராமையே ஸ்டார்ட் ஆக வைக்கிறது.

ஆதித்யா சங்கர் என்பவர் 'ரஜினி ++' என்ற ப்ரோகிராம்மிங் லாங்குவேஜ் கண்டுபிடித்துள்ளார். இந்த ப்ரோக்ராம்மிங் லாங்குவேஜை 2022 ஆம் ஆண்டு கண்டுபிடித்திருக்கிறார். இந்த யோசனை 'ஆர்னால்ட் சி' என்ற உலக புகழ்பெற்ற அரோனால்டின் வசங்களை வைத்து உருவாக்கப்பட்ட ப்ரோகிராமை பார்த்து வந்திருக்கிறது. இந்த ரஜினி++ ப்ரோக்ராம்மிங் லாங்குவேஜ் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.

இந்த ப்ரோக்ராம்மிங்கை ஸ்டார்ட் செய்வதற்கு 'லட்சுமி ஸ்டார்ட்' என்றே ஆரம்பம் ஆகிறது. if else ப்ரோக்ராம்யில் 'ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்', if statementல் 'என் பெரு மாணிக்கம்', else statementல் 'எனக்கு இன்னொரு பெயர் இருக்கு', முடிவில் 'கத்தம் கத்தம்'. அதுவே fizzbuzz ப்ரோக்ராம்மில் லூப்பிற்கு 'நான் ஒருதடவை சொன்ன நூறு தடவ சொன்ன மாறி'. function with returnயில் 'இது எப்படி இருக்கு', 'சும்மா அதுருதுல' என்று இந்த ப்ரோக்ராம்மிங் முழுக்க முழுக்க ரஜினியின் திரைப்பட வசனங்களைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இந்த ப்ரோக்ராம்மிங் லாங்குவேஜ் பைதானில் எழுதப்பட்டிருக்கிறது. இதை பிப்(pip) மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.  

- பா.முஹமது முஃபீத்.

Timepass Online
timepassonline.vikatan.com