
"நாளைய இயக்குனர்" என்னும் Show விலிருந்து தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த கார்த்திக் சுப்புராஜ், இவ்வருடத்தின் தீபாவளி வின்னர் படத்தைக் கொடுத்திருக்கிறார்
எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் இவர் இயக்கி நவம்பர் 10ஆம் தேதி வெளியான ஜிகர்தண்டா double X திரைப்படம் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு நடிகர்கள் தனுஷ், சிம்பு, இயக்குனர்கள் ஷங்கர், நெல்சன், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன், புஷ்கர் காயத்ரி, சௌந்தர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் என பலரும் அவர்கள் வாழ்த்துகளை X வலைத்தளத்தில் குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (14.11.23) ரஜினிகாந்த் கடிதம் மூலம் கார்த்திக் சுப்புராஜுக்கும் பட குழுவினருக்கும் அவரது வாழ்த்துகளை கூறியிருக்கிறார். படத்தின் நடிகர்கள், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என தனி தனியாக தனிப்பட்ட முறையில் புகழ்ந்திருக்கிறார்.
"ஜிகர்தண்டா XX ஒரு குறிஞ்சி மலர்". " I am proud of you கார்த்திக் சுப்புராஜ்" என்று ரஜினிகாந்த் அக்கடிதத்தில் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் ஒரு மிக பெரிய ரஜினி காந்த் ரசிகர் என்பது திரையுலக ரசிகர்கள் அறிந்த செய்தி. ரஜினி நடிப்பில் கார்த்திக் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' திரைப்படம் netizens இடையில் fan boy யாக இருந்த கார்த்திக்கின் வளர்ச்சியை கண்டு நெகிழ வைத்தது.
இந்நிலையில், இப்பாராட்டு கார்த்திக் மற்றும் படக்குழு மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, கார்த்திக் மற்றும் படக்குழு ரஜினியை சந்தித்து எடுத்த்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. நல்லொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஜிகர்தண்டா XX படக்குழுவினருக்கு எங்கள் தரப்பு வாழ்த்துக்களும்!