79 வயசுல 7-வது குழந்தைக்கு அப்பாவா! - நிஜ Father ஆன God Father நடிகர்!   

சியான் விக்ரமின் ஃபேவரைட் நடிகர் 79 வயது கிழட்டுச் சிங்கம் ராபர்ட் டி நிரோ! 'காட்ஃபாதர்', 'டாக்ஸி டிரைவர்' போன்ற பல கிளாசிக் படங்களில் நம்மை வசீகரித்தவர். இன்றும்கூட பிஸியாக நடிப்பில் கலக்கிவருகிறார்.
robert de niro
robert de nirotimepass

ஹாலிவுட் நடிகராக நடிப்புக்காக இருமுறை ஆஸ்கர் வென்றிருக்கிறார். 'About my Father' என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ராபர்ட், அண்மையில் படத்தின் புரொமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது டிவி ஒன்றின் நெறியாளர், 'உங்களுடைய 6 குழந்தைகள் பற்றி சொல்லுக்கள்!' என்று கேள்வி கேட்க, கேஷுவலாக, 'ஏழு குழந்தை எனக்கு!' என்று திருத்தம் செய்திருக்கிறார். 

நெறியாளர் மட்டுமல்ல அவர் ரசிகர்களுக்கே கூட இது தெரியாத விஷயம் என்பதுதான் ஹைலைட்! 

1976-ல் டியான்னே என்ற பெண்ணை மணந்தவர் முதல் குழந்தைக்கு தகப்பனாகி இருக்கிறார். அந்தக் குழந்தையே இப்போது 51 வயதான ட்ரேனா என்ற பெண். அதாவது பாட்டியாகவே ஆகிவிட்டார். அதன்பிறகு ராபர்ட் அடுத்தடுத்த காதல் மணங்கள், காதலில்லாமல் லிவிங் டுகெதர் என நிறைய ரிலேஷன்ஷிப்பில்   இருந்து 6 குழந்தைகளுக்கு தகப்பனாகி விட்டார். இந்த 6-வது பெண் குழந்தை ஹெலன் கிரேஸிற்கே 11 வயது ஆகிவிட்டது. 

robert de niro with his kids
robert de niro with his kidstimepass

இப்போது 7-வது குழந்தை பிறந்ததை மட்டும் தான் தலைவர் சொல்லியிருக்கிறார். எந்த ரிலேஷன்ஷிப் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால், அவரது மேனேஜர் இந்தத் தகவலை உறுதிபடுத்தியிருக்கிறார். 

'79 வயசுல குழந்தையா..!' என சக 'ஹாலிவுட்மேட்'களே பெருமூச்சு விடுகிறார்கள்.

- சமர்

robert de niro
உலக நாயகன் மட்டுமல்ல 'முதல்' நாயகனும்தான்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com