'சமூககனி எனும் சமுத்திரகனி' - அது ஒரு டவுசர் காலம் | Epi 10

எல்லா ட்ராமாவிலும் கலந்துக்கொண்டு அப்பா கேரக்டரில் மட்டும்தான் நடிப்பார். 'மிக்கி மவுஸுக்கு அப்பா கேரக்டர் இருந்தா கொடுங்க மிஸ்..' என எல்.கே.ஜி ஆண்டு விழாவில் கேட்டு, டீச்சர்களைத் திணறடித்திருப்பார்.
சமுத்திரகனி
சமுத்திரகனிடைம்பாஸ்

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம்' தொடர்.

இந்த வாரம், சமூககனி என அன்பாக அழைக்கப்படும் சமுத்திரகனியின் பள்ளிக்காலத்தைதான் பார்க்கப் போகிறோம்.

எல்லா ட்ராமாவிலும் கலந்துக்கொண்டு நடித்திருப்பார். ஆனால், அப்பா கேரக்டரில் மட்டும்தான் நடிப்பார். 'மிக்கி மவுஸுக்கு அப்பா கேரக்டர் இருந்தா கொடுங்க மிஸ்..' என எல்.கே.ஜி ஆண்டு விழாவில் கேட்டு, டீச்சர்களைத் திணறடித்திருப்பார்.

சமுத்திரகனி
'முன்னாள் ச.ம.உ ஹெச்.ராஜா' - அது ஒரு டவுசர் காலம் | Epi 7

கணக்கு பரீட்சைனா, 'கணக்கு பாடத்த நீங்க ஏன் வெறும் எண்களா பாக்குறீங்க. உங்க எண்ணங்களா பாருங்க. கூட்டல கூட்டுக் குடும்பமா பாருங்க. பெருக்கல பெருங்காயமா நெனச்சு ருசிங்க...' என்றும், அறிவியல் பரிட்ச்சையாக இருந்தால், 'அணு'ங்குறதும் ஒரு உயிர்தான். எங்க எதிர்த்த வீட்டுப் பொண்ணு பேருக்கூட அனுதான். கொடைகானல் காண்வென்ட்ல படிக்கிறா....' என்றும், பதில் தெரியாத கேள்விகளுக்கு அட்வைஸுகளை எழுதியிருப்பார்.

தன் நண்பன் சசியுடன் சேர்ந்துக்கொண்டு, பள்ளியில் உள்ள எல்லா காதல்களையும்  சேர்த்து வைத்திருப்பார். ஹெட்மாஸ்டர் பிரம்பை எடுத்து அடித்தால், 'சம்போ சிவ சம்போ' என ஹைபிட்சில் கத்தியிருப்பார்.

பரீட்சையில் பிட் அடித்து மாட்டிக்கொண்டால், "அத ஏன் வெறும் பிட்டா பாக்குறீங்க. அந்த பிட்டுக்குள்ள இருக்க 'அமீபா' படத்த பாருங்க. அமீபா'ங்குறது ஒரு உயிர். அது உங்களுக்குள்ள இருக்கு, எனக்குள்ள இருக்கு, கணக்கு டீச்சர் கணபதி சார்கிட்ட இருக்கு. அதோட பழகுங்க சார்...' என பாடம் நடத்தியிருப்பார்.

பெரியவனாகி என்ன ஆவேன்னு கேட்டா, "நான் ஆல்ரெடி டீச்சர் மாதிரிதான் பாடம் எடுத்துட்டிருக்கேன். அதனால, பெரியவனானா ஹெட் மாஸ்டர் ஆகலாம்னு இருக்கேன்." என சொல்லி உண்மையைப் போட்டு உடைத்திருப்பார்.

சமுத்திரகனி
'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி' - அது ஒரு டவுசர் காலம் | Epi 9

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com