அது ஒரு டவுசர் காலம் - சிம்பு வெர்ஷன்

சாதா சீசன்களில் அதே கருப்பு ட்ரெஸ்ஸைப் போட்டுக்கொண்டு 'பெரியார் குத்து'க்கு அன்வெல் டே டான்ஸ் ஆடியிருப்பார்.
சிலம்பரசன் - டி.ராஜேந்திரன்
சிலம்பரசன் - டி.ராஜேந்திரன்

லிட்டில் சூப்பர் ஸ்டாரில் இருந்து, யங் சூப்பர் ஸ்டாராக ஆகி, இப்போது தனது சினிமா மாநாட்டை நடத்தி காட்டியிருக்கும் சிம்பி, லிட்டில் சிம்புவாக இருக்கும்போது என்னெல்லாம் செய்திருப்பார்னு பாப்போம்.

  • ஹோம் ஒர்க் பண்ணாதவங்க எல்லாம் கைய தூக்குனு வாத்தியார் கேட்டா, கைய தூக்காம ஒத்த விரல மட்டும் தூக்கிருப்பார். கோவமான வாத்தியார் பிரம்பால வெளுத்தா, "எவன்யா உன்ன பெத்தான் பெத்தான்.. அவன் கைல கெடச்சா செத்தான் செத்தா"னு பாடிட்டு ஓடிருவார்.

  • சபரி மலை சீசன் வந்தால், கருப்பு ட்ரெஸ் போட்டு, பக்தி பாடல்களில் முழ்குவதும். சாதா சீசன்களில் அதே கருப்பு ட்ரெஸ்ஸைப் போட்டுக்கொண்டு 'பெரியார் குத்து'க்கு அன்வெல் டே டான்ஸ் ஆடியிருப்பார்.

சிலம்பரசன்
சிலம்பரசன்
  • தான் ஐந்தாவது படிக்கும்போது, தன் ஸ்கூலில் எட்டாவது படிக்கும் ஜெஸ்சிக்கு பிடித்த புட்டு, கொண்டை கடலையையே தினமும் கொண்டு வருவார்.

  • பள்ளியில் பேச்சுப் போட்டி நடந்தால், தன் தம்பி குறளரசனை கூட்டி வந்து, காமத்து பால் என்ற பெயரில் பெண்களை திட்டி கவிதைகள் வாசிப்பார்.

  • பள்ளி ஆன்வெல் டேகளில், அவரே பாட்டு பாடி, அவரே பாட்டு எழுதி, அவரே டான்ஸ் கோரியோகிராப்பிங் செய்து, அவரே அதற்கு விசில் அடித்துக்கொண்டிருப்பார்.

  • ஓட்டப்பந்தயப் போட்டிகளில் கலந்துக்கொண்டால், ஓடாமல் அங்கேயே நின்றுக்கொண்டு, "யார் ஃபர்ஸ்ட் போறாங்குறது முக்கியமில்ல.. யார் ஃபர்ஸ்ட் வராங்குறதுதான் முக்கியம்"னு பஞ்ச் அடிப்பார்.

  • ஒருமுறை வாத்தியார் இவரை அடிக்க, திரும்ப வாத்தியாரை இவர் அடித்துவிட்டு, "நான் கண்ணாடி மாதிரிலே.. நீ பண்றததான் நீ திரும்பி பண்ணுவேன்லே"னு சொல்லி, மேக்கொண்டு நாலு அடி வாங்குவார்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com