TV Serials
TV SerialsTV Serials

TV Serials : சின்னத்திரையில் வரிசைகட்டும் விழாக்கள் - சிறிய இடைவேளைக்குப் பிறகு Epi 13

திருமண நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு என அடுத்தடுத்துக் களைகட்ட இருக்கின்றன சில நிகழ்ச்சிகள். யார் யாருக்கு, என்ன, எங்கே நடக்கிறது பார்க்கலாமா?
Published on

சின்னத்திரை நட்சத்திரங்களை உற்சாகப்படுத்தும் சன், விஜய், ஜீ தமிழ் சேனல்களின் விருது விழாக்கள் ஒருவழியாக நடந்து முடிந்து விட்ட நிலையில், தொலைக்காட்சி ஏரியாவில் இனி விழாக்களின் காலம் போல. திருமண நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு என அடுத்தடுத்துக் களைகட்ட இருக்கின்றன சில நிகழ்ச்சிகள். யார் யாருக்கு, என்ன, எங்கே நடக்கிறது பார்க்கலாமா?

விஜய் டிவியின் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் 'கனா காணும் காலங்கள்' தொடரில் அபி கேரக்டரில் நடித்து வரும் தீபிகாவுக்கும், கௌதம் கேரக்டரில் வரும் ராஜ வெற்றி பிரபுவும் காதலிப்பதாக நீண்ட நாட்களாகவே கிசுகிசுக்கப் பட்டு வந்த நிலையில் இருவரும் அந்தக் காதலைக் கல்யாணச் சேதியாக்கி இருக்கிறார்கள்.

'நண்பனே எனக்குக் காதலனாகி கணவணாகவும் ஆகப் போகிறான், ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது' என தீபிகா கூற அதை ஆமோதித்திருக்கிறார் ராஜ வெற்றி. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இம்மாத இறுதியில் திருமணம் நடக்க இருக்கிறதாம். காதல் ஜோடி இப்போது கல்யாண பர்ச்சேஸில் பிஸி என்கிறார்கள். இன்னொரு திருமணம் ஜூன் 7ம் தேதி சென்னை வடபழனியில் நடக்கிறது.

'ஏலே சாமி நம்ம சாதிக்காரப் பயலே, பேசுறப்ப காது ஆடுது கவனிச்சயா..' என 'சாமி' படத்தில் கோட்டா சீனிவாசராவ் பேசுவாரே, அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரும் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நீண்ட காலம் தலைவராக இருந்தவருமான நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ராஜேந்திரன் குடும்பத் திருமணம் அது.

TV Serials
'செல்ல'மாகப் பேசி வலை விரிக்கும் Tamil Serial ஹீரோ - ரசிகைகளே உஷார்|சிறிய இடைவேளைக்குப் பிறகு|Epi 10

ராஜேந்திரன் நடிகை ஶ்ரீலேகாவைக் காதலித்துத் திருமணம் செய்தவர். இவர்களது மகன் சரவணன். சினிமாவுக்கு முயற்சியில் இருந்து கொண்டே அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். திமுகவின் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் இளைஞரணியில் பொறுப்பிலிருக்கிற சரவணனின் திருமணத்திலும் டிவி சினிமா நட்சத்திரங்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

நிச்சயதார்த்தம், திருமணம் என்றால் அடுத்து வளைகாப்புதானே? சஹானாவின் வளைகாப்பு ஜூன் முதல் தேதி நடக்கவிருக்கிறது.

அழகு சீரியலில் நடிகை ரேவதியின் மகளாக நடித்து பலரது கவனத்தையும் பெற்றவர் சஹானா ஷெட்டி. கொரோனா சமயத்தில் அந்த சீரியல் நிறுத்தப்பட, தெலுங்கு சினிமா பக்கம் போய் அங்கு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு 2021ம் ஆண்டு இதே வைகாசி மாதம் சென்னையில் கோயில் ஒன்றில் வைத்து திருமணம் நடந்தது

மாப்பிள்ளை அபிஷேக் புதுச்சேரியில் மருத்துவ்ராக இருந்தார், திருமணம் முடிந்ததும் அபிஷேக் சென்னைக்கு மாறுதலாகி வந்து இங்குள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாய்மையடைந்த சஹானாவுக்கு வரும் ஜூன் முதல் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. சீரியல் நடிகர் நடிகைகள் பலருக்கும் அழைப்பு விடுத்து வருகிறார் சஹானா.

TV Serials
TV Serials : டிவி நடிகர்கள் ஏன் விவாகரத்து செய்கிறார்கள்?|சிறிய இடைவேளைக்குப் பிறகு Epi 11
Timepass Online
timepassonline.vikatan.com