தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள்ல முன்னணி நடிகையா இருக்கிறவங்க தான் தமன்னா. தமிழ் திரையுலகம் பொருத்தவரைக்கும் முன்னணி நடிகர்கள் கூட தமன்னா ஜோடி சேர்ந்து நடிச்சிருக்காங்க. சூப்பர் ஸ்டார் கூட ஜெயிலர் படத்துலயும் நடிச்சிட்டு இருக்காங்க..
33 வயசான தமன்னாக்கு எப்போ கல்யாணம்னு ரசிகர்கள் கேட்டுட்டே இருந்தாங்க. அதற்கான பதில்தான் ரீசன்டா ஒரு இன்டர்வியூல தமன்னாவும் வேற ஒரு இன்டர்வியூல அவங்களுடைய காதலரும் கொடுத்திருக்காங்க. இது எல்லாமே எங்க தொடங்குச்சு தெரியுமா ?? கோவால தான் !!
இந்தி திரைப்பட உலகத்துல கலக்கிட்டு இருக்க விஜய் வர்மா நாடக நடிகரா தான் தன்னுடைய திரை வாழ்க்கைய தொடங்குனாரு. விஜய் வர்மாவும் நம்ம தமன்னாவும் சேர்ந்து New year அப்போ கோவா ட்ரிப் போயிருக்காங்க. அங்க அவங்க எடுத்த சில புகைப்படங்கள் லீக் ஆகி, இவங்க காதலர்கள் அப்படின்னு கிசுகிசுக்கப்பட்டிச்சு. அப்போதைக்கு தமன்னா தரப்புலையும், விஜய் வர்மா தரப்புலயும் இந்த கிசுகிசுக்கு எந்த ஒரு பதிலுமே வரல.
வர்ற ஜூன் 29 நெட்ஃப்ளிக்ஸ்ல ரிலீஸ் ஆகபோற லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்துலதான் முதல் முறையா தமன்னாவும் விஜய் வர்மாவும் இணைந்து நடிச்சிருக்காங்க. இங்க தான் இவர்களுடைய காதலும் மலர்ந்திருக்கு.
சமீபத்துல கொடுத்த இன்டர்வியூல தமன்னா விஜய் வர்மாவ பத்தி "நான் அதிகமா அக்கறை காட்டுற நபர் அவர்தான். அவர் தான் என்னோட மகிழ்ச்சியான இடம். சக நடிகரா இருக்காரு அப்படின்ற ஒரே காரணத்துக்காக ஒருத்தர் மேல ஈர்ப்பு வரும்னு நான் நினைக்கல.. அப்படி பார்த்தா என் கூட எவ்வளவோ பேரு நடிச்சிருக்காங்க.. உண்மையாலே ஒருத்தர் மேல உங்களுக்கு காதல் வருதுன்னா அது ரொம்ப ஆழமானது அது ரொம்ப பர்சனல் ஆனதும் கூட..."
"விஜய் வர்மாவ பத்தி சொல்லனும்னா அவர் கூட நான் சேர்ந்தது ரொம்ப இயல்பா நடந்த ஒரு விஷயம். எனக்காக அவர் நிறைய விஷயங்கள விட்டுட்டு வந்து இருக்காரு. அதனால அவருக்காக நானுமே நிறைய விஷயங்கள விட்டுட்டு வந்து இருக்கேன்" அப்படின்னு தமன்னா சொல்லியிருக்காங்க .
வேறொரு இன்டர்வியூல விஜய் வர்மா தமன்னாவ பத்தி, "என்னோட வாழ்க்கையில இப்ப நிறைய காதல் இருக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" அப்படின்னு சொல்லி இருக்காங்க..
இன்டர்வியூஸ்ல தமன்னா விஜய் வர்மாவ பத்தி சொல்ல.. விஜய் வர்மா தமன்னாவ பத்தி சொல்ல. ட்ரெண்டிங் செலிபிரிட்டி coupleஆ இவங்க வலம் வந்துட்டிருக்காங்க.
இவங்களுடைய காதல்ல பாக்கும்போது தமன்னாவோட " இதுபோல் மழைகாலம் என் வாழ்வில் வருமா" இந்த பாடல் தான் ஞாபகம் வருது... !!