தமிழ் சினிமா க்ரூப் டான்சர்ஸ் - ஹெவியா லைக் பண்ண வச்சவங்க லிஸ்ட்

'அழகிய தமிழ்மகன்'ல 'எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே' பாட்டுல விஜய் பக்கத்துல ஆடுற இவர் விஜய் அளவுக்கு வேகமாவும் அவருக்கு நிகரா முட்டி ஸ்டெப்பெல்லாம் போடுவார் நோட் பண்ணிருக்கீங்களா?
க்ரூப் டான்சர்ஸ்
க்ரூப் டான்சர்ஸ்டைம்பாஸ்

தமிழ் சினிமா பாடல்கள்ல ஹீரோ, ஹீரோயினை விட அவங்க கூட குரூப்ல ஆடுற சிலர் நம்மள ஹெவியா லைக் பண்ண வெச்சிடுவாங்க அவங்களதான் நாம இப்போ பார்க்க போறோம்.

'செல்லமே' படத்தில் 'ஆரிய உதடுகள் உன்னது' பாட்டுல வர்ற இவங்க ரீமாசென்னுக்கே டஃப் கொடுக்குற அளவு எக்ஸ்பிரஷன்ல பின்னுவாங்க செம கியூட்டாவும் இருப்பாங்க கவனிச்சிருக்கீங்களா?

'அழகிய தமிழ்மகன்'ல 'எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே' பாட்டுல விஜய் பக்கத்துல ஆடுறவர் இவர்.

விஜய் அளவுக்கு வேகமாவும் அவருக்கு நிகரா முட்டி ஸ்டெப்பெல்லாம் போடுவார் நோட் பண்ணிருக்கீங்களா?

ஆர்யா நடிச்ச 'ஒரு கல்லூரியின் கதை' படத்தில் 'காதல் என்பது கடவுள் அல்லவா' பாடல்ல சோனியா அகர்வால் கூடவே நிக்கிற இவங்க பெயர் சாய் மாதவி.

தனுஷ் ஸ்டைல்ல சொன்னா அந்த செகப்பு டிரெஸ்ல தேவதை மாதிரி தெரிவாங்க ஆனா கடைசில 'இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு' படத்துல விமல்கூட நடிச்சு வீனாப் போய்ட்டாங்க.

'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் மேகமாய் வந்து போகிறேன்' பாடலில் விஜய் எந்த மீட்டர்ல ஆடுறாரோ அதே மீட்டர்ல அச்சுப் பிசகாம அவர்மாதிரியே அசால்ட்டா ஆடிக்கிட்டு இருப்பார் இவர்.

ஒரு சாயல்ல விஜய் மாதிரி கூட தெரிவார். 90ஸ் கிட்ஸுக்கு இவர் முகம் கண்டிப்பா ஞாபகம் இருக்கும்.

'ஜெகமே தந்திரம்' படத்தில் "ரகிட ரகிட" பாடலில் ஒரு ஓரமா ஆடி ஓஹோன்னு பேமஸ் ஆனவங்க ஹேமா அவங்க டான்ஸ் பார்த்துட்டு யூ-டியூபர்ஸ் எல்லாம் வளைச்சு வளைச்சு பேட்டி எடுத்தது தனிக்கதை.

'பீஸ்ட்' பட அரபிக் குத்து பாட்டுல வர்ற இவங்க பெருசாலாம் ஆட மாட்டாங்க பாட்டுல கூட அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்தான் வருவாங்க. ஆனா, பூஜா ஹெக்டேய விட செமையா இருப்பாங்க நெசமாத்தான்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com