Tamil Heroகளை காப்பாற்றும் மிருகங்கள் - ஒரு லிஸ்ட் !

அன்னை ஓர் ஆலயம் படத்துல குட்டி யானை பண்ணாத சேட்டை பண்ணி ரஜினிய மண்ணை கவ்வ வைக்கும். சரக்கடிச்சிட்டு ஆடுறது, சினிமா பாக்குறது, கண்ணாமூச்சு ஆடுறதுன்னு பெரியவங்களும் குழந்தையா மாறி ரசிச்ச படம்.
Tamil Hero
Tamil HeroTamil Hero

சினிமாவுல சிங்கம், யானை, ஆடு, குதிரை பாம்பு, பல்லின்னு பல்வேறு மிருங்கங்களை வெச்சி வித்தை காட்டி பணம், புகழ் பெற்ற பழம்பெரும் தயாரிப்பாளர் சின்னப்பதேவர். அவருக்குப் பின்னால பொறக்கும்போதே பூனைக்குட்டியோட பிறந்தவர் மாதிரிதான் இயக்குனர் ராம. நாராயணன் திரைப்படத்துல அவர் ‘யூஸ்’ பண்ணாத மிருகங்களே இல்லைனுதான் சொல்லணும்.

வில்லனுக்கு ’டப்’ கொடுக்கிற அளவுக்கு மிருகங்களோட சேட்டைய அழகா படம்புடிச்சி காட்டிருப்பாரு. வில்லன்களைப் பார்த்து ’என்னை மிருகம்னு நெனைச்சி மேல கை வெச்சின்னா உனக்கு நரகம் கன்பார்ஃம்டா’ ன்னு பஞ்ச் டயலாக் பேசலையே தவிர மத்த எல்லா வேலையும் பாத்திருக்குங்க அந்த வாயில்ல ஜீவன்கள். அதை பத்திதான் பேசப்போறோம்.

1 . ’ராம் லட்சுமண்’ னு ஒரு படம். கமல் அண்ணன், தம்பி லட்சுமண் யானை. ரெண்டு பேருக்கும் பாசம்னா அப்டி ஒரு பாசம். நகம் – சதை, பூண்டு – வாசம், தேர்தல் – இலவசம், சரக்கு – போதை மாதிரி ஒண்ணுல ஒண்ணு கலந்திருக்கு. படத்தோட ஆரம்பத்துலயே நம்பியார் வளர்க்கிற கோமதிங்கிற யானைதான் ராமன் (கமல்) அம்மாவுக்கு பிரசவம் பாக்கறதுக்காக டாக்டரை கூட்டிட்டு வரும்.

வீட்டுல ராமன் பிறக்க, அதே நேரம் காட்டுல கோமதியும் ஒரு ஆண் யானை குட்டிய பெத்துப்போட்டுட்டு மண்டைய போட்ரும். அதுக்கப்புறம் கமலுக்கு ராமன்னும், யானை குட்டிக்கு லட்சுமணன்னும் பேரு வெப்பாரு நம்பியாரு.

அந்த யானைக்குட்டி கமல், ஸ்ரீப்ரியா காதலுக்கு ஒத்தாசை பண்றது, வில்லன்ககிட்ட மாட்டிகிட்ட அப்பா நம்பியார், அண்ணனை கமல், அண்ணி ஸ்ரீப்ரியாவையும் காப்பாத்துறதோட ஒரு மிகப் பெரிய கடந்தல் கும்பல் போலீஸ்ல சிக்குறதுக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணுது. அதையெல்லாம் நம்பிதான அப்போ படத்தை ஓட வெச்சாங்க. அப்போல்லாம் இந்த மாதிரியான படத்தை ’ஆ’ னு பாத்துட்டு இருந்தாங்க.

Tamil Hero
ஊர் பெயர்களில் உள்ள டெரர் பெயர்கள் - ஒரு லிஸ்ட்

2 . ’ஆட்டுக்கார அலமேலு’ ன்னு ஒரு படம். ஹீரோ சிவக்குமார், அதுலயும் ஸ்ரீப்ரியாதான் ஹீரோயின். படத்தோட டைட்டிலைப் பாத்தாலே கதையில கண்டிப்பா ஒரு ஆடு இருக்கும்னு தெரிஞ்சுபோச்சு. அந்த காலகட்டத்துல இந்த ஆடு சக்கைப் போடு போட்டுச்சி. கஷ்டப்பட்டு ஸ்ரீப்ரியா ஆத்துல புடிச்சி போட்ட மீனை நாய் கவ்விகிட்டு ஓட விரட்டிட்டுப்போயி நாயிகிட்ட கடிபட்டாலும் பரவாயில்லன்னு மீனை மீட்கிறது.

அப்றம் தோப்புல தேங்கா திருடனுங்கள பிடிச்சிக் கொடுக்கிறது இப்டி ஏகப்பட்ட வேலை பாக்குது ராமுங்கிற ஆடு. இதுல சிவக்குமார் கூடவே இருந்து குழி பறிக்கிற வில்லன் ஜெய்கணேஷ் கிளமாக்ஸ்ல பணத்தோட கம்பி நீட்டுறப்போ அவரோட அல்லக்கைகளை ஒரு பள்ளத்துக்குள்ள தந்திரமா இறக்கிவிட்டு, போலீஸ் வர்ற வரைக்கும் தப்பிச்சிப்போகாம காவக் காக்குது ராமுங்கிற ஆடு. எல்லா வயசு மக்களையும் ரசிக்க வெச்ச படம்.

மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்

3 . ’அன்னை ஓர் ஆலயம்’ படத்துல ரஜினி காட்டு விலங்குகளை வேட்டையாடி பிஸினஸ் பண்ற வேலை. இப்போல்லாம் அது பெரிய குற்றம். ரோட்டுல ஒரு நாய் கிராஸ் ஆனாலே அதன் ஓனர்கிட்ட (தெரு நாய்களுக்கு ஏது ஓனர்..?) அனுமதி வாங்கிட்டிங்களான்னு சென்சார்ல கேள்வி கேக்கும். அப்போல்லாம் அது இல்லை. அதனாலதான் தேடித்தேடி மிருகங்கள் கதையா எடுத்தாங்க. பிஸினசுக்காக தாய்க்கிடேர்ந்து ஒரு குட்டி யானைய ரஜினி பிரிக்க, ரஜினியோட அம்மா அஞ்சலிதேவி.. இறக்கும்போது குட்டி யானைய அதோட ஆத்தாகிட்டையே சேத்துடுன்னு சத்தியம் வாங்கிட்டு செத்துப் போயிடுறாங்க.

அப்புறம் கதை குட்டி யானைய தாய் கூட சேத்தாரா இல்லையாங்கிறதுதான் மீதி கதை. அந்த குட்டி யானை பண்ணாத சேட்டை பண்ணி ரஜினிய மண்ணை கவ்வ வைக்கும். சரக்கடிச்சிட்டு ஆடுறது, சினிமா பாக்குறது, கண்ணாமூச்சு ஆடுறதுன்னு சிரிச்சி.. சிரிச்சி வயிறு வலிக்கிற அளவுக்கு இருக்கும். குழந்தைங்க மட்டுமில்ல. பெரியவங்களும் குழந்தையா மாறி ரசிச்ச படம்னா அது ’அன்னை ஓர் ஆலயம்தான்.’

Tamil Hero
சொந்தப் படம் எடுத்து ’சூனியம்’ வைத்த நடிகர்கள் - ஒரு லிஸ்ட்

4 . பாம்பு பால், முட்டை சாப்பிடும் அதுவும் வீக்லி ஒன்ஸ் வெள்ளிக்கிழமைல மறக்காம டைம் டேபிள் போட்ட மாதிரி லிட்டர் கணக்குன பால் குடிக்கும்னு நம்பளை நம்ப வெச்சதே சினிமாதானே.. அதுவும் நாகப்பாம்பு வைராக்கியம் வெச்சதுன்னா எத்தனை வருஷம் ஆனாலும் வைரி வெச்சி சாகடிக்கும்ங்கிற அரிய சைன்ஸை கண்டு சொன்னதும் தமிழ் பிலிம்ஸ்தான். ’நீயா’ னு ஒரு பழைய படம். கமல் தன் பிரெண்ட்ஸ் குருப்போட பிக்னிக் போக, தண்ணியடிச்சமா, வாந்தி எடுத்தமான்னு இல்லாம ’ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா’ ன்னு ஒரு இச்சாதரி பாம்பு ஜோடிகள் ஆண், பெண் மனித ரூபத்துல உச்ச நிலையில டூயட் பாடிட்டு இருக்கிறப்ப குடிகார பிரெண்டு ஒருத்தன் ஆண் இச்சாதாரிய கொல்றான்.

’என் ஹஸ்பெண்ட அநியாயமா கொன்னுட்டிங்களேடா பாவிகளா உங்க ஒருத்தனையும் உசுரோட விடமாட்டேன் னு சபதத்த சைலண்டா போட்டுகிட்டு ஒவ்வொருத்தனையா பலி வாங்குது. எல்லாத்தையும் பலி வாங்கின இச்சாதாரி பெண் பாம்பு. (ஸ்ரீபிரியா) அதுல கமலை மட்டும் பலி வாங்க முடியலை. ஏன்னா அவர் அந்தப் படத்துல ஹீரோ. ஹீரோவை சுத்தி நூறு ஏ.கே 47 ன்ல சுட்டாலும் குண்டு பாயாத ரத்தம் வராம இருந்தாதான் ஹீரோன்னு தமிழ் சினிமா நமக்கு கத்துக்கொடுத்த பாடமே அதுதான..

Tamil Hero
பெண் வேடமிட்டு ‘சொதப்பிய’ நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

5 . பேபி ஷாம்லி நடிச்ச படம் ’துர்கா’ குரங்கு, நாய் ரெண்டும் இந்த படத்துல ஆக்ட் பண்ணிருக்கும். அந்த காலக்கட்டத்துல பக்தி படம். குறிப்பா குழந்தைகளை குதூகலிக்கிற வைக்கிற மாதிரியாக நிறைய மிருங்களை வெச்சி படங்கள் வந்துட்டு இருக்கும். ராமநாராயணன் தன் படங்கல்ல நடிக, நடிகைங்களை விட மிருங்கள்களைத்தான் முதல்ல புக் பண்ணுவாரு. அந்த அளவுக்கு படங்களை கியூவுல எடுத்து விட்டுட்டு இருந்தாரு.

இந்த படத்துல குரங்கும், நாயும் ஷாம்லிக்கு தலை பின்னி விடுறது. வில்லன் அடியாளை மலை மேலருந்து ஆத்துல தள்ளி விடுறதுன்னு ஏகப்பட்ட சோஷியல் சர்வீஸ் பண்ணும். இதுல ஷாம்லி, குரங்கு, நாய்க்கும் ’பாப்பா பாடும் பாட்டு’ ன்னு ஒரு பேஃமலி ஸாங்கெல்லாம் கூட இருக்கு. ராமநாராயணன் இயக்குன படங்கள் பெரும்பாலும் கமர்சியல் ஹிட்டுங்கிறதால இந்த ’துர்கா’ வும் சூப்பர் ஹிட்டாச்சி. குரங்கு, நாய்க்காக ’ரிபீட்’ ஆடியன்ஸ் திரும்பத் திரும்ப வந்து பாத்த வரலாறும் இந்தப் படத்துக்கு உண்டு.

Tamil Hero
கடவுள் வேஷம்போட்டு கடுப்பேத்தின நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com