'OPS-ஆ நடிச்சு படாதபாடுபட்டேன்' - Telephone ராஜ் பேட்டி

Telephone ராஜ் பேட்டி.
Telephone ராஜ்
Telephone ராஜ்டைம்பாஸ்

'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்'  காமெடியில்  வடிவேலுவுடன்  நடித்து பிரபலமானவர் நடிகர் டெலிபோன் ராஜ். அவருடன் ஒரு ஜாலியான சந்திப்பு  

"கன்னியாகுமரி மாவட்டத்துல பால்குளம் அப்படிங்கிற சின்ன கிராமம்தான் என்னோட சொந்த ஊர். ப்ளஸ் ஒன் முடிச்சதும் சினிமா ஆசை வர கிளம்பி சென்னை வந்தேன். பி.எஸ்.என்.எல் ஆபிஸ்ல கேன்டீன் வேலை கிடைச்சது. அந்த வேலையைப் பார்த்துக்கிட்டே சினிமா சான்ஸ் தேடுவேன். அப்படி சின்னச் சின்னதா சான்ஸ் கிடைச்சது.  

ஷூட்டிங் ஸ்பாட்ல  என்னை டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல வேலை பாக்குறதா நினைச்சிக்கிட்டாங்க. அங்கே கேன்டீன்ல வேலை பார்க்கிறத மறைச்சு நானும் அதையே மெயின்டைன்    பண்ணிக்கிட்டேன்.  அப்படி செட்ல டெலிபோன் ராஜ்னு கூப்பிட ஆரம்பிச்சு  கடைசில அதே  நமக்கு பேராகிப் போச்சு. அப்பறம் 'ஊத்தப்பம்' காமெடில நடிச்சதும் எல்லாரும் ஊத்தப்பம்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

வைகைப்புயலுடன் நடித்த முதல் காமெடி ?

'பகவதி' படத்துல நடிக்க செலக்ட் ஆனேன். வடிவேல் சார்கூட காம்பினேஷன்னு சொன்னாங்க. நான் குஷியாகிட்டேன். எனக்குத் தெரிஞ்சவங்களுக்கு  எல்லாம் போன் போட்டு நான் வடிவேல் சார்கூட நடிக்க போறேன்னு சொல்லிட்டு இருந்தேன். அடுத்தநாள் ஸ்பாட்ல காஸ்ட்யூம் எல்லாம் போட்டு ரெடியா இருந்தேன்.

திடீர்னு என்னை பார்த்த வடிவேல் சார் "அந்தப் பையன் வேணாம்"னு என்னை தூக்க சொல்லிடார். அவர்கிட்ட  "என்னன்ணே இப்படி சொல்றீங்க?"னு பேசிப்  பார்த்தேன். "இதென்ன வெளாட்டா, காமெடிப்பா"னு என்னை கழட்டி விட பார்த்தார். நான் பிடிவாதமா நின்னேன்.

2000 மேடை நாடகத்துல நடிச்சிருக்கேன்னு சொன்னேன். கடைசில "சரி சரி இவனையே போட்டு எடு"ன்னு சம்மதித்தார். அதுதான் "முருகேசன் வரக்கூடாது சின்னச்சாமி வந்தே ஆகணும்"னு 'அன்பு' படத்துல ஹிட்டான அந்த போன் காமெடி.

அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் காமெடி எப்படி உருவாச்சு ?

வழக்கமா ஒரு காமெடியை எடுக்க குறைஞ்சது ஒருநாளாவது ஆகும். ஆனா இந்த ஊத்தப்பம் காமெடியை  வெறும் அரை மணி நேரத்துல எடுத்து முடிச்சோம். டயலாக் பேசுறப்போ என்னை ராகம் போட்டு பேசச் சொன்னாங்க "அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்" புதுசா ஒரு மாடுலேஷன்ல இழுத்து சொன்னேன்.

செட்லயே எல்லாரும் சிரிச்சாங்க. அப்பறம் "ஒரு அடிக்கு 50 மேனி 6 அடிக்கு 300 ரூவா பில்ல போடு"ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா, அது இந்த அளவு மீம்ஸ், இன்ஸ்டா விடீயோஸ்னு இப்போ வரைக்கும் பேசப்படும்னு நான் நிச்சயம் எதிர்பார்க்கலை. இந்த காமெடிக்கு எனக்கு  3000 சம்பளம் கொடுத்தாங்க.  

வடிவேல் சார் அளவுக்கு நடிகர் விஜய் சாரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் பொம்பளையா பொறந்திருந்தா அவரை லவ்கூட பண்ணிருப்பேன் அவ்ளோ பிடிக்கும். சர்க்கார் படத்துல அவர்கூட நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. ஒருநாள் என்கிட்ட வந்த விஜய் சார் 'ஆஸம் ஆஸம் எப்படிணே கேரக்டராவே மாறி நடிக்கிறீங்க சூப்பர்'னு பாராட்டினார். 7 நாள் அவர்கூட நடிச்ச அந்த அனுபவத்தை மறக்க முடியாதது

வெற்றிநடை போடும் தமிழகமே விளம்பரத்துல ஓ.பன்னீர் செல்வமா நடிச்சது பத்தி சொல்லுங்க ?

அதை ஏன் கேக்குறீங்க அந்த விளம்பரத்துல நடிச்சிட்டு நான் படாத பாடுபட்டேன். தேர்தல்ல தி.மு.கவுக்கு  ஆதரவா எடுத்த அந்த விளம்பரத்துல நான்  ஓ.பன்னீர் செல்வமா நடிச்சேன். பன்னீர் செல்வத்தை ரொம்ப கிண்டல் பண்ற மாதிரிதான் இருக்கும் அந்த விளம்பரம். விளம்பரம் வெளியானதுக்கு அப்பறம் என்னால ரோட்ல நடமாட முடியல.

தேர்தல் முடிஞ்சு எவ்ளோ நாளாச்சு போன வாரம் வளசரவாக்கம் பக்கத்துல போறப்போ 'எங்க ஓ.பி.எஸ் ஐயாவையே கலாய்க்கிறியா உனக்கு அவ்ளோ தைரியமா?'னு என்னை ஒருத்தர் மிரட்டினார்.  என்னதான் மிரட்டினாலும் நான் எப்பவும் தி.மு.கதான.

நீங்க சினிமாவில் ஜெயிச்சது என்ன ? தொலைச்சது என்ன ?

சினிமாவில் நான் சாதிச்ச விஷயம்னா நான் படிச்ச கன்னியாகுமரி ஸ்கூல்ல என்னை சீப் கெஸ்ட்டா கூப்பிட்டாங்க. சினிமாவினால் நான் இழந்தது என்னன்னா என் குடும்பத்தோட பாசத்தை இழந்துட்டேன். அப்பா, அம்மா கன்னியாகுமரில இருப்பாங்க நான் சினிமாவுக்காக சென்னைலயே இருந்துட்டேன். அம்மா சாகும்போது கூட என்னால அவங்க பக்கத்துல இருக்க முடியல உஜ்ஜயினிங்கிற ஊர்ல ஷூட்டிங்ல இருந்தேன். அந்த வருத்தம் இப்பவும் இருக்கு. தொடர்ந்து சினிமால ஓடிக்கிட்டு இருக்கேன். இன்னும் பெரிய உயரம் தொடணும் அதுதான் என் ஆசை என்கிறார் டெலிபோன் ராஜ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com