ஹெச்.வினோத் வலிமை படத்துக்காக ஸ்டண்ட் கொரியோகிராபியும் பண்ணியிருக்கிறார் என்றால் நம்பமுடியவில்லையா..? ரஷ்யாவில் எடுக்கப்பட்ட சேஷிங் காட்சியில் டூப் போடாமல் அஜீத்தும் பைக் ரேஸர் ஒருவரும் (கார்த்திகேயாவுக்கு டூப்) நடித்த சண்டைக் காட்சியை வடிவமைத்தது வினோத் தான்.
அதன் பின்னணியில் ஒரு பஞ்சாயத்தைச் சொல்கிறார்கள்.
ஹைதராபாத்தில் சினிமா ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து சேஸிங் காட்சிகளை எடுக்காமல் பைக் ரேஸர்களையே நடிக்க வைத்ததால் யூனியன் பிரச்னை ஆகி திலீப் சுப்பராயன் உள்ளிட்ட யாரும் ரஷ்யா போகவில்லையாம்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் படமாக்க வேண்டும் என வினோத்தே சண்டையை வடிவமைத்து அஜீத்திடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாராட்டும் வாங்கியிருக்கிறார். வாழு... வாழவிடு!