கமர்சியல் பக்கம் கரை ஒதுங்கும் ராஜு முருகன் - யார் அந்த ஹீரோ?

ராஜுமுருகன் அடுத்து ஆசிட் டெஸ்ட்டுக்கு தயாராகிவிட்டார்.
இயக்குனர் ராஜு முருகன்
இயக்குனர் ராஜு முருகன்

'ஜோக்கர்' படத்துக்காக தேசிய விருது வாங்கிய ராஜுமுருகன் அடுத்து ஆசிட் டெஸ்ட்டுக்கு தயாராகிவிட்டார். ஆம். ஒரு கமர்ஷியல் ஹிட்டுக்காக கார்த்தியோடு கரம் கோர்த்திருக்கிறார்.

ஜோக்கர் பட போஸ்டர்
ஜோக்கர் பட போஸ்டர்

தற்போது கதை விவாதம் உள்பட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக போய்க் கொண்டிருக்கிறது.

ஜிப்ஸியின் சறுக்கலுக்குப் பிறகு, பரபர ஆக்‌ஷன் மசாலாவோடு கொஞ்சம் தன் டச்சுடனும் ஒரு ஸ்கிரிப்ட்டை சொல்லி கார்த்தி அண்ட் கோவை கன்வின்ஸ் செய்திருக்கிறார்.

கைதி படத்தில் கார்த்தி
கைதி படத்தில் கார்த்தி

விரைவில் டைட்டிலோடு படபூஜை இருக்கும் என்கிறார்கள். ஆல் தி பெஸ்ட் தோழர்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com