'இது ஒரு டைம்பாஸ் நோய்' : புதுப்புது நோய்களை வைத்து ஒரு சினிமா பார்ட் - 2

என்னென்ன டிஸ்ஆர்டர்களை வைத்து சினிமா பண்ணலாம் என சின்னதாய் ஒரு யோசனை. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.
இது ஒரு டைம்பாஸ் நோய்
இது ஒரு டைம்பாஸ் நோய்டைம்பாஸ்
Published on

தமிழ் சினிமாவில் இது புதுப்புது நோய்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஐடியா கிடைத்தது. அதிர்ச்சியில் தூங்கி விழும் நார்கோலெப்சியை ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷால் மூலம் அறிமுகப்படுத்தினார்கள்.

இனி அடுத்து என்னென்ன டிஸ்ஆர்டர்களை வைத்து சினிமா பண்ணலாம் என சின்னதாய் ஒரு யோசனை. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.

ஜம்பிங் ஃப்ரெஞ்ச் மேன் டிஸ் ஆர்டர் : (Jumping Frenchman disorder)

அதிர்ச்சியான விஷயங்களுக்கு சம்பந்தமே இல்லாத ரியாக்ஷனைக் கொடுக்கும் இந்த ஜம்பிங் ஃபிரெஞ்ச் மேன் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவர்தான் ஹீரோ. சிறுவயதில் ஃபர்ஸ்ட் ரேங் எடுத்ததற்கே அழுது ஒப்பாரி வைத்திருப்பார்.

சம்பந்தமே இல்லாமல் ரேங்க் கார்டு கொடுத்த வாத்தியின் காதைக் கடித்திருப்பார். அப்பா இறந்த போது ஸ்வீட் எடுத்துக் கொண்டாடி அடி வாங்கியிருப்பார்.

இப்படி இருக்கும் ஹீரோ வளர்ந்த பிறகு சம்பந்தமே இல்லாமல் ஹீரோயினை நாய் துரத்தும்போது நாயைப் பார்த்து கைதட்டிச் சிரிக்கிறார்.

மோதலில் ஆரம்பித்து காதல் பூக்கிறது. தன் மகள் இப்படி ஒருத்தரைக் காதலிக்கிறாரே என நொந்து நூடுல்ஸ் ஆன அப்பா வில்லனாய் மாறுகிறார்.

‘உனக்கு என் மகளைக் கட்டிக்கொடுக்க மாட்டேன்டா’ என சொல்லும் வில்லன் அப்பாவைப் பார்த்து ‘சூப்பர் மாமா’ எனச் சொல்லி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து நடையைக் கட்டுவதோடு படம் முடிகிறது.

‘டைம்பாஸோலெப்ஸி’ டிஸ்ஆர்டர் :

இந்தப் பிரச்னை உள்ள ஹீரோவுக்குப் பார்க்கும் எல்லா விஷயமும் டைம் பாஸ் கேரக்டராய் தெரியும்.

லிட்டில் ஜானாய் பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய அவன் எப்படி ஒரே நாளில் அலசி ஆராயும் அப்பாடக்கராய் முதல்வர் நாற்காலியில் உட்காருகிறான் என்பதே கதை.

இந்தக் கட்டுரையைப் படித்ததும் நார்கோலெப்சி வந்து தடால் என விழுந்து அடிபடாமல் இருக்க வேண்டுகிறேன்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com