Cinema Fun: தப்பே பண்ணாம மாட்டிக்கொள்ளும் ஹீரோக்கள்!

செய்யாத குற்றத்துக்காக போலீஸ்ல சிக்கி சின்னாபின்னமாகி ஜெயில்ல இருந்தோ, வேன்லருந்து குதிச்சோ போலீஸை மொக்கையாக்கி, தப்பிச்சு உண்மையான குற்றவாளிகளை கோர்ட்டுல நிறுத்துன ஹீரோக்களைப் பத்தி பார்ப்போம்!
rajathi raja movie
rajathi raja movietimepass

மிழ் சினிமாவுல தவிர்க்க முடியாத விஷயம் ஏகப்பட்டது இருக்கு. அதுல ஒண்ணுதான் செய்யாத குற்றத்துக்கு போலீஸ்ல சிக்கிற ஹீரோக்கள், ஆரம்பத்துல பாத்திங்கன்னா குற்றதுக்கான எல்லா எவிடன்ஸும் ஹீரோதான் பண்ணின மாதிரி இருக்கும். அதுதான கதையும். அதுக்கப்புறம் ஜெயில்ல இருந்தோ, போலீஸ் வேன்ல இருந்து குதிச்சோ, ஒண்ணுக்குப் போறேன்னு ஒத்த விரலை காட்டி தப்பிக்கிற ஹீரோக்கள் கூட இருக்காங்க. அப்டி தப்பிச்சி உண்மையான குற்றவாளிகளை கோர்ட்டுல (போலீஸ் டிபார்ட்மெண்டை மொக்கையாக்கி) ’யுவர் ஆனர்’ னு நிறுத்துன ஹீரோக்களைப் பத்தி பார்ப்போம். 

 ’மனிதனின் மறுபக்கம்’ னு ஒரு படம். சிவக்குமார் ஹீரோ, ராதா ஹீரோயினி. ஆரம்பத்துல ’ஸ்மைல் பிலீஸ்’ னு நிக்க வெச்சி விளம்பர போட்டோ எடுத்துட்டு இருக்காரு சிவக்குமாரு. அவரோட மனைவியையே மாடலா நிக்க வைக்கிறப்ப. ’தம்பாத்துண்டு கவர்ச்சி காட்டு. இல்லன்னா போட்டோ வேஸ்ட்டு’ ன்னு சொல்றாரு. காண்டான மனைவி. போட்டோவும் வேணாம் புருஷனும் வேணாம்னுட்டு போயிருறாங்க. இந்த சமயத்துல திடீர்னு ராதா மர்டராகி மட்டையாகிக் கிடக்க, அந்த நேரம் யதேச்சையா வந்த சிவகுமார்தான் புடிக்காத பொண்டாட்டிய போட்டுத்தள்ளிட்டான்னு பொது மக்களும், போலீஸும் நம்ப, ’ஆயா சத்தியமா ராதா நான் கொல்லலை. அர்ஜூன்தான்’ னு சொல்ல… ’கதை உடாத’ ன்னு காக்கிங்க கம்பைத் தூக்க, ஜெயில்லேர்ந்து எஸ்கேப் ஆகி, உண்மையான கொலை பண்ணினவனை பிடிப்பாரு நடிப்புல சிவக்குமாரைப் பத்தி சொல்லவே வேண்டியதில்ல. வாழைத் தாரை வெட்டுன மாதிரி தாரைத் தாரையா கண்ணீர் சிந்துவாரு பாருங்க செம. 

 கமல் அண்ணன், லட்சுமணன் ங்கிற யானை தம்பி. இந்த கூத்து பெரும்பாலும் சினிமாவுலதான் நடக்கும் அந்த வரிசைல வந்ததுதான் ’ராம் – லட்சுமணன்’ ங்க்கிற. படம்.  கமல், ஸ்ரீபிரியா, நம்பியார், அசோகன் நடிச்சிருப்பாங்க. ஆரம்பத்துல லட்சுமணனோட அம்மா யானை, ராமனோட அம்மா பிரசவத்துக்கு டாக்டரையெல்லாம் கூட்டிட்டு வரும்னா பாத்துக்கங்க. அப்றம், கமல், ஸ்ரீபிரியாவை காதலிக்கிறாரு. திடீர்னு பாத்தா ஸ்ரீபிரியா அப்பா யானை மிதிச்சி செத்துப்போறாரு. அதே நேரம் காதலிய பாக்கறதுக்கு ஸ்ரீபிரியா வீட்டுக்கு கமலும், யானை லட்சுமணன் வர, கமல்தான் லட்சுமணனை ஏவிவிட்டு சதக்குன்னு மிதிச்சி கொன்னதா சந்தேகப்படுறா காதலி. இந்த கொலை கேஸ் போலீஸ் அதிகாரியான கமலோட அப்பா நம்பியார்ட்டையே வருது. இண்டர்வெல்லுக்கு அப்புறம் ஸ்கிரிட்படி துப்பறிஞ்சி இவன்தான் கொலைகாரன்னு சொல்லிட்டு காதலிகிட்ட நல்ல பேர் வங்கிருவாரு. இதைத்தான் அப்போ ரெண்டு மணி நேரம் ’கொலைகாரன் யார்..யார்..?’ னு நகம் கடிச்சிகிட்டு உட்காந்து பாத்திருக்காங்க.

'ராஜாதி ராஜா' படத்துல கோடீஸ்வர அப்பா விஜய்குமாரை சின்ன வீட்டு செட்டப்பான ஒய். விஜயாவின் சதிகார கும்பல் கொலை செய்துட்டு, மப்புல மாடிலேர்ந்து விழுந்து செத்துட்டாருன்னு கண்ணீரும் கம்பலையுமா நிக்குது. பாரின்லேர்ந்து வந்த விஜயகுமாரோட  மகன் படிச்ச ரஜினிகிட்ட விசுவாசி ஒருத்தர் ’தம்பி காதை கொண்டா கடிக்காம ரகசியம் சொல்றேனுட்டு ’உன் அப்பனை சின்னாத்தா கும்பல்தான் கொன்னது’ ன்னு சொல்ல, வெகுண்டு எழுந்த வேட்டிய மடிச்சு கட்டின படிச்ச ரஜினி,  கூட்டாளி ஜனகராஜோட கூட்டுசேந்து உண்மைய தேடி அலையறப்ப ஜனகராஜும் மலையில மண்டைய போடுறார். பழி படிச்ச ரஜினி மேல போட,… போலீஸ் தூக்கிட்டுப்போயி தூக்குல போட தீர்ப்பு எழுதி பேனா முள்ளை உடைக்குது. அப்றம் ’உண்மைய கண்டுப்புடிக்கலன்னா நீ என்னய்யா ஹீரோ..?’ ன்னு ரசிகருங்க நக்கல் பண்ணுவாங்கன்னு ஜெயில்லேர்ந்து தப்பிக்கிறார். அப்பதான் தன்னை மாதிரியே இருக்கிற அப்பாவி ரஜினிக்கு பணம் தர்றேன்னு சொல்லி ஆள் மாறாட்டத்துல அப்பாவி ரஜினிய ஜெயில்ல களி தின்னவும், படிச்ச ரஜினி துப்பு துலக்கவும் அலையிறாரு இறுதியில போலீஸ் கெட்டப்ல இருக்கிற ஜூனியர் ஆர்ட்டிஸ்டுங்க அப்பாவி ரஜினிய தூக்கு கயித்துல மாட்டி நிறுதுறப்பா. ஓடி வந்து குற்றவாளிகளை இழுத்துட்டு வந்து கோர்ட்டுல நிறுத்துறாரு படிச்ச பணக்கார ரஜினி. 

அண்ணன் அசோகன், தம்பி எம்.ஜி.ஆர். ’தாழம்பூ ’ங்கிற படத்துலதான் இந்த உடன்பிறப்பு காம்பினேஷன். எம்.ஜி.ஆர் பெரிய.. பெரிய படிப்பெல்லாம் படிச்சு முடிச்சிட்டு அண்ணன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குற அளவுக்கு அண்ணாத்த மேல அளவு கடந்த பாசம். அப்படிப்பட்ட அண்ணன் மேல ஒரு தும்பு தூசு பட்டாலும் சும்மா இருப்பாரா… அடிச்சி துவச்சி காயப்போட்டுற மாட்டாரா என்ன…? அதுவும் அண்ணிய அம்மாவா நெனைக்கிற கொழுந்தன் எம்.ஜி.ஆர். அப்படிதான் ஒரு தபா தம்பிக்கு வேலை விஷயமா கடன் கேக்கறதுக்கு முதலாளி வீட்டுக்கு அசோகன் போக, அங்க நம்பியார் அதே முதலாளிய பணத்துக்காக கொலை பண்ண, ..பழி வழக்கம்போல அப்பாவியான அசோகன் மேல வந்து தொபக்கடீர்னு விழுது. அப்றம் மிதி கதை ஹீரோ ஒரிஜினல் குற்றவாளிங்களை கண்டுபிடிச்சி, அண்ணன் நிரபராதின்னு ஊர் மத்தியில வட்டிக்கடையில வெச்ச நகை மாதிரி  காத்துல பறந்த மானத்த மீட்டுட்டு வர்றாரு நம்ம பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர். 

 ’தவசி’ ன்னு ஒரு படம்.  அப்பா தவசி விஜயகாந்த், மகன் பூபதி அவரும் விஜயகாந்த். தவசி ஐயா தீர்ப்பு சொன்னாருன்னா அடடே அப்டி இருக்கும். சொன்னா சொன்னதுதான். நாக்கு வாக்கு ரெண்டு சுத்தம். அப்படி பிசிரில்லாம மரத்தடியில பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கும்போதுதான் என்ன கெரகமோ தெரியல ஒருத்தன்மேல ’கோயில் நகைய நீதான் திருடியிருக்க அதனால நீதான் அக்யூஸ்டு’ ன்னு தவசி சர்ட்டிபிகேட் கொடுக்க, அவன் மனசு உடைஞ்சி நாண்டுகிட்டு சாகறான்., அப்பறம்தான் தெரியுது. ஆட்டைய போட்ட திருடன் அவன் இல்லன்னு தெரிஞ்சுபோயி தவசி தாங்கொன்னாத் துயரத்த அனுபவிக்கிறாரு.

அப்போ உண்மையாவே கோவில் நகைய எடுத்தது யாருன்னு பிராய்ஞ்சி தேடிக் கண்டுப்புடிச்சி மக்கள் முன்னாடி டீடெய்ல் பண்றதுதான் மகன் பூபதியோட ஒர்க். கடைசில மூளைய பர்பெக்டா யூஸ் பண்ணி அப்பா தவசிகிட்டையே சபாஷ் வாங்குறாரு பூபதி. இதனால் அறியப்படும் நீதியாவினில் சும்மா பத்து இருபது குடிசைங்க இருக்கிற ஊர்ல மரத்துக்கடியில தீர்ப்பு சொல்றவங்க பேச்சை கேக்கக்கூடாது.

- உத்தமபுத்திரன்

rajathi raja movie
HBD Captain: 'கைதி டில்லியாக கேப்டன் விஜயகாந்த்'

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com