ஒருவேளை நம்ம பார்த்திபன் ஸ்கூல் ஆரம்பிச்சா எப்டி இருக்கும்னு யோசிச்சு பாத்தோம்.
அங்கே எல்லாமே வித்தியாசமா இருக்கும். பண்டகசாலைனு போட்டு அதை அடிச்சுட்டு பாட சாலைனு நேம் போர்டுலேயே எழுதி இருக்கும். ‘இங்கு களவும் கற்றுத் தரப்படும்’னு பிரின்சிபால் ரூம்ல எழுதிப் போட்டிருப்பாங்க. ப்ராக்கெட்ல ‘களவும் கற்று மறன்னு நம் முன்னோர்கள் சொன்னதைச் செய்றோம்’னு பிரின்ட் பண்ணி இருப்பாங்க.
ஹோம் வொர்க்கை எல்லாம் ஒண்ணு கீழே ஒண்ணாவோ, கீழிருந்து மேலாகவோ மட்டும்தான் எழுதணும். பயப்புடாதீங்க. ஸ்கூல் ஐடி கார்ட் நேராதான் இருக்கும். ஆனா, அதுல இருக்க மாணவர்கள் படம் தலைகீழா இருக்கும்.
அதேபோல, இங்க தேர்வுகளுக்கு புதுமையா இருக்கும். 'மாணவர்களே இல்லாத முதல் maths வகுப்பு, தமிழின் முதல் non teaching டீச்சர்'னு பள்ளி நிர்வாகம் தரப்புலயும் புதுமைக்கு பஞ்சம் இருக்காது.
பசங்க எந்தத் தப்பு பண்ணாலும், அதுக்கு புதுமையா ஒரு காரணமா அதேநேரம் புரியாத காரணமா சொன்னா, பரிசோட விடுமுறை தருவாங்க.
ஸ்கூல் ஆன்வல்டே, ஸ்போர்ட்ஸ் டே, டீச்சர்ஸ் டே, செகண்ட் சாடர்டே, தேர்ட் சண்டேனு எல்லா சிறப்பு நாள்லயும் விருது வழங்கும் விழா நடக்கும். ஆனா, மாணவர்களுக்கு கிடையாது அந்த ஸ்கூல நடத்துற பார்த்திபனுக்குதான் எல்லா விருதும்.
தப்பித்தவறிக் கூட யாரும் ப்ளூ சட்டைப் போட்டுக்கிட்டு, ஸ்கூல் வந்துறக்கூடாது. உடனே டிசிதான். ஆனா, ஒத்த செருப்ப மட்டும் போட்டுக்கிட்டு வரலாம்.
நல்லா படிச்சு, முதல் ரேங்க் வாங்குற மாணவர்களுக்கு 'விவேகானந்தர் தெரு, துபாய் பஸ் ஸ்டேண்ட் அருகில், துபாய் மெயின் ரோடு, துபாய்'ன்ற விலாசத்துலருக்கு கேக்ரான் மேக்ரான் காலேஜ்ல இலவச சீட் கிடைக்கும்.
மழைப் பெய்தா ஸ்கூலுக்கு குடைக் கொண்டு வரலாம். ஆனா, நீங்க கொண்டு வர குடைக்குள்ளயும் மழை பெய்யிற குடையா இருக்கணும்.
வடிவேலுனு பேர் இருக்கிற பசங்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்.