தமிழ் சினிமா மட்டும் இல்லன்னா?

லவ் ஃபெயிலியர்னா கண்டிப்பா தாடியோடதான் திரியணும்கிற நியூட்டனோட 12ஆம் விதியெல்லாம் தெரிஞ்சுருக்காது.
டைம்பாஸ்
டைம்பாஸ்டைம்பாஸ்

ஒருவேளை இந்த சினிமா மட்டும் இல்லைன்னா, நம்ம வாழ்க்கை என்ன ஆயிருக்கும் பாஸ்? வாங்க பார்ப்போம்...

ஷார்ட்டெர்ம் மெமரி லாஸ், லாங்க்டெர்ம் மெமரிலாஸ், மெடுலா ஆப்லேங்கேட்டா அப்புறம் வாய்லேயே நுழையாத சில பல டிஸ்ஆர்டர் ஆன்டெனா ஆர்டர்லாம் கேள்விப்பட்டிருப்போமா?

நுரையீரல் பஞ்சு போன்ற மென்மையானதுன்னு தெரிஞ்சிருக்காது.

பங்க் வைக்கிறதுல தொடங்கி மண்டையில கலர் கலரா ரோடு போடுற வரைக்கும் எதுவுமே அறியாப் பிள்ளைகளா இருந்திருப்போம். அதிலேயும் நம்ம பொண்ணுங்க தலைமுடியை விரிச்சுட்டு லூஸ் ஹேர்னு லூஸு மாதிரி சுத்திருக்க மாட்டாங்க.

ஃப்ளெக்ஸ், பேனர், கட்&அவுட்ல ஊத்துற பாலை எல்லாம் நம்மாளுங்க மிச்சம் பண்ணி பால் பண்ணையே வெச்சிருப்பாங்க.

பல பேருக்கு மயக்கமருந்தை கர்ச்சீப்ல தடவி மயங்க வெச்சுக் கடத்தணும்கிறது தெரிஞ்சிருக்காது.

முக்கியமான விஷயம், ‘என் உச்சி மண்டைல சுர்ர்ருங்குது’ ‘ஊதா கலரு ரிப்பன்’ மாதிரியான அதி அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க ரிங்டோன்லாம் கிடைக்காம வெறும் நோக்கியா டியூனோடவே திரிஞ்சிருப்போம்.

லவ் ஃபெயிலியர்னா கண்டிப்பா தாடியோடதான் திரியணும்கிற நியூட்டனோட 12ஆம் விதியெல்லாம் தெரிஞ்சுருக்காது.

மாஞ்சாக்கயிறு கட்டிக் காத்துல பறக்கவிடற பட்டத்தைத் தவிர பல ‘புரட்சி’ ‘பவர்’ பட்டங்கள்லாம் காதுலயே கேட்டிருக்க மாட்டோம்.

‘நாம வேற ஒலகத்துக்குத் தாவிடுவோம்’, ‘அது நம்மள நோக்கித்தான் வருது, எல்லோரும் குப்புறப் படுங்க’ன்னு அர்னால்டும் வில் ஸ்மித்தும் தேவை இல்லாம இங்கே வந்து ‘டப்’பியிருக்க மாட்டாங்கோ.

‘சிக்ஸ்பேக் வெக்கிறேன் பாரு’னு பசங்களும் ஜீரோ சைஸ் ஹிப்னு பொண்ணுங்களும் டயட்டுங்கிற பேர்ல பஞ்சத்துல அடிபட்ட மாதிரி பாதி இட்லி சாப்பிட்டு இருக்க மாட்டாங்க.

ஆனாலும் இந்த சினிமா இல்லைன்னா, நாம எல்லோருமே வேறு மாதிரியான ஓர் இரண்டாம் உலகத்துலதான் வாழ்ந்துட்டு இருப்போம்கிறது மட்டும் தாறுமாறான உண்மை.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com