'எந்த ராஜராஜ சோழன் பெஸ்ட்?' - மக்களின் கருத்து இதுதான்!

அருள்மொழி வர்மன் பட்டத்துக்கு வந்து மூன்றாண்டு காலக்கட்டத்தில் தான் ராஜராஜ சோழன் ஆனதா வரலாறு சொல்லுது... அப்படி பார்த்தா அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவியும் ராஜராஜ சோழனாக நடிகர் திலகத்தையும் சொல்லலாம்....
ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன்டைம்பாஸ்

தஞ்சாவூர் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளான சதய விழா, இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், 'ராஜராஜ சோழனாக நடித்ததில் யார் பெஸ்ட்?' என்ற கேள்வியை, டைம்பாஸ் முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தோம். அக்கேள்விக்கு வந்த சில சுவாரசியமான பதில்கள் கீழே.

Priya Vinodh :

யாரையும் கருப்பு நிறத்தில் காட்டல படத்தில்.. தமிழர்களின் உண்மையான நிறம் கருப்பு என்று கேள்வி பட்டிருக்கிறேன்.. எல்லாரும் இல்லையேன்றாலும் கொஞ்சம் பேர் கருப்பு நிறத்தில் காட்டி இருக்கலாம் பொன்னியின் செல்வன் படத்தில்.. ஏன் அழகு என்றால் வெள்ளையாக இருப்பவர்கள் மட்டும் தான் இருக்க வேண்டுமா??

Kandeepan Ranganathan :

ராஜராஜ சோழனின் தோற்றம் பற்றிய கற்பனைக்கு ஒருவேளை சிவாஜியாக இருக்கலாம். ஆனால் நிஜ ராஜராஜ சோழன் இருவருக்கும் சம்பந்தம் இல்லாத தோற்றத்தில் இருந்திருக்கலாம்.

Rising Selva :

உண்மையான ராஜராஜ சோழனே ஜெயம் ரவி போன்று தான் இருந்திருக்க வேண்டும் சிவாஜி போன்று இருந்திருக்க வாய்பே இல்லை.. அவா் நாடக ராஜராஜ சோழன்..

ராஜ ராஜ சோழன்
'அண்ணாமலை, பொன்னியின் செல்வன், கூல் சுரேஷ்' - டைம்பாஸ் மீம்ஸ்

Rejina :

அருள்மொழி வர்மன் பட்டத்துக்கு வந்து மூன்றாண்டு காலக்கட்டத்தில் தான் ராஜராஜ சோழன் ஆனதா வரலாறு சொல்லுது... அப்படி பார்த்தா அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவியும் ராஜராஜ சோழனாக நடிகர் திலகத்தையும் சொல்லலாம்....

ஒரு நடிகனின் தோரணம் மட்டுமல்ல கண், நடை ,உடை ,பாவனை முக்கியமான கம்பீரம், உடல் மொழியில் ஒரு நேர்த்தி,இதெல்லாம் இப்ப இருக்கிற நடிகர்களுக்கு சுத்தமா இல்லை, அதுவும் பொன்னியின் செல்வனில் விக்ரம், சரத்குமார் தவிர மீதி எல்லாம் சுமார் ரகம்தான். சிவாஜி ,எம்ஜிஆர், நம்பியார்,அசோகன் என பல பழைய நடிகர்களுக்கு அப்புறம் 80s 90s நடிகர்களுக்கும் கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது. இப்ப எல்லாம் புது முகம் லாம் சரித்திர படத்துக்கெல்லாம் ஒத்தே வர்றல .

வீரமுத்து எத்தியப்பிரியர்:

தஞ்சையில் உள்ள சோழன் சிலையே சிவாஜிய மாடலாக கொண்டு செய்யப்பட்டதுதான்.

ராஜ ராஜ சோழன்
'இது பொன்னியின் மாமியார்' - மாமியார்கள் செய்யும் சேட்டைகள்

Nanjil Valavan :

அளவுக்கதிகமான ஒப்பனை, தேவைக்கதிகமான நடிப்பு, தேவையில்லாமல் கண்டபடி உதறல் எடுத்ததை போல் அலட்டிக்கொள்ளும் உடல்மொழி, தெருக்கூத்தில் பேசுவது போன்ற வசன உச்சரிப்பு - இதுதான் ராஜராஜ சோழன் சிவாஜி. இப்படி சொல்வது சிலருக்கு கோபத்தை உண்டாக்கலாம். ஆனால் யதார்த்தம் அது தான்.

சிவாஜி பெரிய சிறந்த நடிகர் தான், ஆனால் அவர் மட்டும் தான் சிறந்த நடிகர் என்று கம்பி கட்டுற கதைகள் வேண்டாம். பெரும்பாலும் சிவாஜியின் நடிப்பு ஓவர் ஆக்டிங் தான். வரலாற்று கதாபாத்திரங்களை யாரும் நேரில் பார்த்தது இல்லை என்பதால் சிவாஜியை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

பொன்னியின் செல்வனில் ரவியின் நடிப்பு ஓரளவு யதார்த்தமாகவே இருந்தது.

Rajeshwaran Natarajan :

சிவாஜியை சிவன் வேடத்தில் பார்த்த பிறகு ஜெமினியை எங்களால் சிவனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிற எப்படி ஜெயம் ரவியை ராஜராஜனாக ஏற்றுக்கொள்ள முடியும்.

நாகூர் மீரான் :

மோகன் .. ராஜ ராஜ சோழன் நான் ன்னு அந்தாளும் கிளைம் பண்ணிருகாப்புல

Thangapandi Srinivas Tps :

ஹேய் மேன் புலிகேசி தெரியுமா உனக்கு?? எனக்கு எப்பயுமே அவர் தான் பெஸ்ட்

ராஜ ராஜ சோழன்
'அஜித் குமார், Singleதான் கெத்து, பொன்னியின் செல்வன்' - டைம்பாஸ் மீம்ஸ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com