3D miniature statues: உங்க மினியேச்சர் சிலை வேணுமா?

மினியேச்சர் பொம்மைகளின்  புன்னகையை விட மெலிதாக வார்த்தைகளை உதிர்க்கிறார் ஸ்ரீஹரி. MY CUTE Mini என்ற பெயரில் மினியேச்சர் பொம்மைகள் தயாரித்து வருகிறார்.
3D miniature statues
3D miniature statuesTimepass

"சின்னவயசுல இருந்தே இந்த சிற்பக் கலைகள் மேல எனக்கு ஆர்வம்  இருந்துச்சு, தேடித்தேடி கத்துக்க ஆரம்பிச்சேன். சொந்த ஊரு சென்னை. இன்ஜினீயரிங் படிச்சுட்டு ஐ.டில ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். இருந்தாலும் மனசுக்குப் பிடிச்ச வேலைய நோக்கித்தான் மனசு கெடந்து ஓட ஆரம்பிச்சுச்சு, அப்போ ஆரம்பிச்சது தான் இந்த சிற்ப வேலைகள்- தன் டேபிளில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த மினியேச்சர் பொம்மைகளின்  புன்னகையை விட மெலிதாக வார்த்தைகளை உதிர்க்கிறார் ஸ்ரீஹரி.

"இரண்டரை வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல கல்லுலதான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். அதுக்கான வரவேற்பு எதிர்பார்த்த அளவில இல்லை. அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ  வந்த ஐடியா தான் இந்த செராமிக் டைப் கிஃப்ட். எதிர்பார்த்ததைவிட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. இதுல விஷயம் என்னன்னா எதுவுமே மெஷின்ல செய்யுறது கிடையாது. எல்லாமே கையில செய்ற பொருட்கள் தான்!

முகம் நேரா பார்த்த மாதிரியான உங்களோட போட்டோ  கொடுத்தால் ஆறு வாரத்துக்குள்ள ஆர்டர் ரெடியாகிடும். வழக்கமா ஒரு பொம்மை செஞ்சு முடிக்க  பத்து நாள் ஆகும். ஆர்டர் எண்ணிக்கை பொறுத்து ஆறு வாரம் வரைக்கும் எடுக்கும்!" என்கிறார்.

சமீபத்தில் ஸ்ரீ தேவி, சூர்யா –ஜோதிகா தம்பதியினரின் குழந்தைகள், நடிகை ஸ்ரீதேவி என மினியேச்சர்கள் செய்து கொடுத்திருக்கிறார். இப்போ இதுதான் ட்ரெண்டி கிஃப்ட் மெட்டீரியல்!

விலையும் இதன் அளவைப்பொறுத்து தான். குறைந்த பட்ச உயரம் 7 இன்ச்சில் இருந்து  35 செ.மீ வரை செய்து தருகிறார்கள். ஏழு இன்ச் சிலையின் விலை ரூபாய் 4300லிருந்து ஆரம்பிக்கிறது. அதிகபட்சமாக  35 செ.மீ-ன் விலை 22000 ரூபாய் வரை விற்கிறார்கள்

அம்மாடியோவ்!

3D miniature statues
Memes | மாதேஷுக்கு அண்ணாமலை ஆறுதல், மீம் கிரியேட்டர்களுக்கு 1 லட்சம் சம்பளம்! Annamalai

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com