இங்கிலாந்தின் டோர்கிங்கைச் சேர்ந்த 70 வயது பெண்மணி ஒருவர் தனது பிறந்தநாளில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் சுமார் 10,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10.37 லட்சம்) மதிப்புள்ள லாட்டரியை வென்றுள்ளார். சர்ரேயில் உள்ள டோர்கிங் நகரில் வசிக்கும் 70 வயதான டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் தனது பிறந்தநாளை ஆயிரக்கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள லாட்டரி சீட்டு மூலம் கொண்டாடினார்.
அவர் தனது 3 மகள்களுடன் 70 வது பிறந்தநாள் விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டில் 'பண சிலந்தி'களை பார்த்தார். இவை குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் ஒரு சிலந்தி இனமாகும். அப்போது அவர் லாட்டரி சீட்டை வாங்கி தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க முடிவு செய்தார்.
பின்னர், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, அவருக்கு லாட்டரி விளையாட்டுகளை நடத்தும் அமைப்பான நேஷனல் லாட்டரியிலிருந்து மின்னஞ்சல் வந்தது. பின்னர் அவர் 10 பவுண்டுகள் அல்லது ஏதாவது சிறியதைப் பெற்றிருக்கலாம் என்று நினைத்து மின்னஞ்சலை வாசித்தார்.
ஆனால் அதில், "வாழ்த்துக்கள், இனி அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 பவுண்டுகள் பெறவுள்ளீர்கள்" என்ற மின்னஞ்சலைப் படித்த டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜால் தன் கண்களை நம்ப முடியவில்லை. கணவரிடம் காட்டிவிட்டு, 'நான் சரியாகப் படித்தேனா? இல்லை, அவர்கள் சொல்வது போல் அது சாத்தியமா?' என்று குழம்பினார்.
அதிர்ச்சியடைந்த டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் தனது மருமகனிடம் சென்று, இதனை குறித்து எல்லாவற்றையும் தெளிவுபடுத்திய பிறகு தனது பிறந்தநாளை ஷாம்பெயின் பாட்டிலுடன் கொண்டாடினார். அடுத்த நாள் காலை, டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் தேசிய லாட்டரியில் இருந்து அஞ்சல் மூலம் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலைப் பெற்றார்.
50 ஆண்டுகள் பழமையான தங்கள் வீட்டையும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்கள் விரைவில் தங்கள் குடும்பத்தை நீண்ட வெளிநாட்டு விடுமுறைக்கு அழைத்துச் செல்லவுள்ளனர். இதை அவர் செய்தால், இந்தப் பயணம் தனது பேரனின் முதல் விமானப் பயணமாக இருக்கும் என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும் 2,11,17,30,38 மற்றும் லைஃப் பால் 3 ஆகியவை வெற்றி பெற்ற லாட்டரி சீட்டின் எண்ணாகும். இப்போது, நான் வெற்றிகளைப் பற்றி நினைக்கும் போது இன்னும் கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றுகிறது, மேலும் 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் அந்த பணத்தை நான் பெறுவேன். நான் 100 வயது வரை வாழ்வதற்கு இது ஒரு ஆர்வத்தை அளிக்கிறது' என டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் கூறினார்.
- மு.குபேரன்.