பள்ளிக் காதலிக்கு ப்ரபோஸ் செய்த 78 வயது மருத்துவர் - வைரலாகும் காதல் வீடியோ!

நான்சி சொன்ன பதில்ல தனக்கு 78 வயதானத மறந்து துள்ளி குதிச்சிருக்காரு தாமஸ்.
love
lovetimepass

60 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கூட காதலிக்கு ப்ரபோஸ் செய்த 78 வயது மருத்துவர். காதலுக்கு ஓகே சொன்ன காதலி. இணையத்தில் வைரலான ப்ரபோஸல் வீடியோ.

வாழ்க்கைல அந்தந்த வயசுல அது அது நடந்துடணும்னு சொல்லுவாங்க. ஆனால், அந்த கூற்றுக்கள்ல பொய்யாக்குற விதமான நிகழ்வுதான் அண்மையில் நடந்திருக்கு. பவர்பாண்டி படத்துல வர்ற மாதிரி தான் இருக்கு இந்த நிகழ்வு.

78 வயதான மருத்துவர் தாமஸ் அவருடைய ஸ்கூல் க்ரஷான நான்சிக்கு ப்ரபோஸ் பண்ண 60 வருடம் வெயிட் பண்ணியிருக்காரு. இந்த ப்ரபோஸல் ஏர்போர்ட்ல நடந்திருக்கு, இதோட வீடியோ வைரலாகியிருக்கு.

தாமஸ், நான்சி வர்றதுக்காக காத்திருக்காரு. நான்சி தாமஸ்ஸ நோக்கி வந்ததும் தாமஸ் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம். நான்சி வந்ததும் ஒரு ஹக் குடுத்து உக்கார வெக்கிறாரு தாமஸ். அப்பறம் தான் சம்பவமே !! தாமஸ் நான்சிக்கு பூக்கள்ல கொடுத்தாரு, அப்ரம் மண்டியிட்டு அவரோட காதல்ல சொல்ல ஆரம்பிக்குறாரு.

love
Vietnam : 60 வருஷமா தூங்காத முதியவர்! - காரணம் தெரியாமல் குழம்பும் டாக்டர்கள் !

"என்னோட தோழியா, காதலியா, பார்ட்னரா எல்லாமுமா நீ மட்டும் வேணும், வார்த்தைகளால சொல்ல முடியாத அளவுக்கு நான் உன்ன காதலிக்கிறேன், என் வாழ்க்கையில மீதம் இருக்க நாட்கள்ல உன்னோட இருந்து நான் சொன்ன விஷயங்கள்ல நிறைவேற்றணும், இந்த உலகத்துலயே மகிழ்ச்சியான பெண்ணா நீ இருக்கணும், நான்சி என்னோட ஆத்ம விரும்பியா நீ இருக்க சம்மதிப்பியா ? அப்டின்னு கேட்ருக்கார்.

உடனே 'மேரி மீ' னு நான்சி சொல்லுவாங்க. நான்சி சொன்ன பதில கேட்டதும் காற்று வெளியிடை பட பாடல் 'அழகியே மேரி மீ ! மேரி மீ' தான் ஞாபகம் வந்தது.

நான்சி சொன்ன பதில்ல தனக்கு 78 வயதானத மறந்து துள்ளி குதிச்சிருக்காரு தாமஸ்.

"காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன, வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம் என்ன"

love
Samantha : சினிமாவுக்கு தற்காலிகமாக டாடா காட்டும் சமந்தா - காரணம் இதோ !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com