90s kids Tailor கடை அட்ராசிட்டிகள் - இதெல்லாம் உங்களுக்கும் நடந்திருக்குமே?

இந்த டெய்லர்களே இப்படித்தான் இந்தப் பிறந்த நாளுக்கு துணி கொடுத்தா அடுத்த பிறந்தநாளுக்கு தான் தருவாங்க. அப்பப்பா!
Tailor
TailorTimepass
Published on

தற்போதுள்ள இளைஞர்கள் ரெடிமேட் பேண்ட், சர்ட் தான் எடுக்கிறார்கள். தற்போது பள்ளி மாணவர்கள் மட்டும்தான் சீருடைக்காக துணிக்கடையில் மீட்டர் கணக்கில் தைக்காத துணி வாங்கி அதை டைலரிடம் கொடுத்து தைத்துக் கொள்கிறார்கள் ஒரு சில பள்ளி சீருடைகள் ரெடிமேடாக கூட கிடைக்கின்றன. ஆனால் 90ஸ் கிட்ஸ் வாழ்க்கையோ டெய்லர் கடையில் தேய்ந்து கிழிந்தது. அந்த அனுபவத்தைப் பார்ப்போமா?

மீ: டெய்லர் எனக்கு இன்னும் பத்து நாள்ல பொறந்த நாள் வருது துணி எடுத்துட்டு வந்திருக்கேன், அடுத்த வாரம் வேணும்...

Tailor
HBD Modi: பிரதமர் மோடியின் டைம்பாஸ் கார்டூன்ஸ்

டெய்லர்: உன்னோட அளவும் துணியும் கொடுத்துட்டு போப்பா அடுத்த வாரம் கரெக்டா சாயங்காலம் 6:00 மணிக்கு வா ரெடியா இருக்கும்...

மீ: (அடுத்த வாரம்  டெய்லர்   கடையில்) டைலர் துணி ரெடி ஆயிடுச்சா....

டெய்லர் : ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்க வீட்ல உடம்பு சரி இல்லை அதனால கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன் ஒரு ரெண்டு நாள்ல தச்சு குடுத்துடுறேன்பா.

மீ: (இரண்டு நாளைக்கு பிறகு) நாளைக்கு எனக்கு பொறந்தநாள் டெய்லர், துணி ரெடி ஆயிடுச்சா இல்லையா?

டெய்லர்: (பக்கத்துல காஜா போடும் பையன் தலையில்  டெய்லர்  பக்கத்துல வச்சுருக்கும் ஸ்கேலில்  அடித்து) சார் வந்திருக்காரு காஜா போட்டு முடிச்சா இல்லையாடா.

Tailor
'வேற லெவல்ங்க நீங்க' - டைம்பாஸ் மீம்ஸ்

(காஜா போடுற பையன் மைண்ட் வாய்ஸ்: துணியே இன்னும் வெட்டல இந்த ஆளு காஜா போட்டுட்டியானு என் தலையில் அடிக்கிறாரு...இந்த அடிக்கு ஒரு சிங்கிள் டீ இருக்குன்னு நினைச்சு காஜா போடும் பையன் சிரிச்சுகிட்டு)

இதோ பட்டன் கட்டினு இருக்குறேன்..

நாளைக்கு காலைல 6 மணிக்கு வந்துருப்பா, அயர்ன் பண்ணி பக்காவா வெச்சிடறேன்.

மீ: (பிறந்தநாள் அன்று காலை 6:00 மணிக்கு டெய்லர் கடையில்)

கடை பூட்டப்பட்டு இருப்பதை பார்த்துவிட்டு நமக்கு வரும் கோபம் அளவே இல்லை.

Tailor
தொடர்: பழைய பேப்பர் கடை - 'பாகிஸ்தான் பிரிவினையும் அப்பளத்தின் வரலாறும்'

இந்த  டெய்லர்களே  இப்படித்தான் இந்தப் பிறந்த நாளுக்கு துணி கொடுத்தா அடுத்த பிறந்தநாளுக்கு தான் தருவாங்க. அதுவும் தீபாவளிக்குத் துணி தைக்கக் கொடுத்து காத்திருக்கும் டென்ஷன் இருக்கே, அப்பப்பா!

உங்களுக்கு இந்த அனுபவம் எல்லாம் ஞாபகம் வருதா.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com