Lkg
LkgTimepassonline

Instagram இல் LKG தோழியை தேடிய பெண் - Viral ஆன LKG Friendship கதை !

லக்ஷிதாவோட போன் நம்பர், காண்டாக்ட் டீடைல்ஸ்னு எதுவுமே நேஹா கிட்ட இல்ல.. நேஹா கிட்ட இருந்ததெல்லாம் அவங்க LKG படிக்கும் போது எடுத்த ஒரு குரூப் போட்டோ தான்.
Published on

இன்னிக்கு இருக்க டிஜிட்டல் உலகத்துல சமூக வலைத்தளம் மூலமா எங்கயோ எப்டியோ இருக்க ஒருத்தர்கிட்ட நம்மளால பேச முடியுது. இது, இந்த சமூக ஊடகத்துடைய ஒரு வரம்னே சொல்லலாம். இந்த சமூக வலைதளத்த வச்சு ஒருத்தர் அவங்களுடைய சின்ன வயசு தோழிய தேடி கண்டுபிடிச்சுருக்காங்கனா நம்புவீங்களா.. ஆமா, நேஹா அவங்களுடய LKG பிரண்டான லக்ஷிதாவ instagram மூலமா கண்டுபிடிச்சிருக்காங்க.‌

நேஹாவுக்கு LKG படிக்கும் போது லக்ஷிதானு ஒரு தோழி இருந்தாங்க.
நேஹாவுக்கு லக்ஷிதாவ எப்படியாவது தேடி கண்டுபிடிக்கணும்னு இன்ஸ்டாகிராம்ல ஒரு பக்கத்த கிரியேட் பண்ணினாங்க. ஏன்னா லக்ஷிதாவோட போன் நம்பர், காண்டாக்ட் டீடைல்ஸ்னு எதுவுமே நேஹா கிட்ட இல்ல.. நேஹா கிட்ட இருந்ததெல்லாம் அவங்க LKG படிக்கும் போது எடுத்த ஒரு குரூப் போட்டோ தான்..

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்துடய பெயர் @finding_Lakshitha.. இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்துல நேஹா கிட்ட இருந்த குரூப் போட்டோல லக்ஷிதாவை மார்க் பண்ணி அந்த புகைப்படத்த போஸ்ட் பண்ணாங்க. கூடவே அந்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டுடய பயோல "இந்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் என் பிரண்ட் லக்ஷிதாவ கண்டுபிடிப்பதற்கான மிஷன் தான், அவளுக்கு 21 வயசு இருக்கும், லக்ஷிதாவுடய தம்பிபேரு குணால் " னு குறிப்பிட்டிருந்தாங்க..

இப்படி இன்ஸ்டாகிராம் மூலமா ஒருத்தர தேடி கண்டுபிடிக்க முடியுமா ??னு கேட்டா !! கண்டிப்பா முடியும்ன்ற மாதிரி தான் ஒரு வீடியோவை நேஹா அந்த அக்கவுண்ட்ல பதிவிட்டு இருந்தாங்க.. அதுல லக்ஷிதாவ கண்டுபிடிக்க அவங்க என்னென்ன பண்ணாங்கன்றத தெளிவா சொல்லி இருக்காங்க.. லக்ஷிதானு பெயர் இருக்க எல்லா இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கும் மெசேஜ் பண்ணி இருக்காங்க.. அப்புறம் ஒரு நாள் அவங்களுடைய ஃப்ரெண்ட் லக்ஷிதா நேஹாவுக்கே மெசேஜ் பண்ணி இருக்காங்க.

சின்ன வயசு தோழிய கண்டுபிடிச்சதும் நேகாவுக்கு ஒரே குஷி.. தோழி கிடச்ச விஷயத்த இன்ஸ்டாகிராமில் சொல்லனும்னு ஒரு வீடியோவும் கிரியேட் பண்ணி போட்டு இருந்தாங்க.. அதுல "என்னுடைய சின்ன வயசு Friendஅ 18 வருஷம் கழிச்சு கண்டுபிடிச்சிட்டேன் !! சின்ன வயசிலயே அவ ஜெயிப்பூருக்கு போயிட்டா !! அவளுடய Surname கூட எனக்கு ஞாபகம் இல்ல !! ஆனா இப்போ அவ எனக்கு கிடைச்சுட்டா"னு ரொம்ப சந்தோஷமா பதிவிட்டு இருந்தாங்க.. இந்த வீடியோ செம்ம வைரல் ஆச்சு.. கிட்டத்தட்ட ஏழு மில்லியன் பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்து இருக்காங்க..

அதான் தோழி கிடச்சிட்டாங்களே !! அப்புறம் ஏன் பயோ அப்டியே இருக்கணும்னு "மிஷன் கம்ப்ளீட்டட்"னு பயோவ அப்டேட் பண்ணி இருக்காங்க நேஹா..

இந்த கதைய தெரிஞ்சிகிட்ட அப்புறம் நம்மள தேடி கண்டுபிடிக்க இப்படி ஒரு பிரெண்ட் இல்லையேனு தான் ஃபீல் ஆச்சு !!

Lkg
Instagram : Noodles உடன் கால் எலும்பை சேர்த்து சமைத்த Insta பிரபலம் !
Timepass Online
timepassonline.vikatan.com