IPL 2023 : Kohli - Gambhir ஜென்ம பகையின் பின்னணி - ஒரு ரீவைண்ட் !

மண்டைகள் உடையாவிட்டாலும் சண்டைகள் ஒண்ணும் கிரிக்கெட்டுக்கோ ஐபிஎல்லுக்கோ புதுசில்ல. சமீபத்துல வந்து உட்கார்ந்துக்குறது கோலி-கம்பீரோட ஸ்டண்ட் காட்சிகள். இது நேத்தோ இன்னைக்கோ ஆரம்பிச்சது இல்லீங்கோ!
gambhir-kohli
gambhir-kohli Timepass

மண்டைகள் உடையாவிட்டாலும் சண்டைகள் ஒன்னும் கிரிக்கெட்டுக்கோ ஐபிஎல்லுக்கோ புதுசில்ல. இன்னமும் சொல்லனும்னா தொடரோட போக்குல விறுவிறுப்பக் கொண்டு வர்றது இந்த குட்டி குட்டி பேட்டில்கள்தான். அந்த பிளே லிஸ்ட்ல சமீபத்துல வந்து உட்கார்ந்துக்குறது கோலி - கம்பீரோட ஸ்டண்ட் காட்சிகள். இது நேத்தோ இன்னைக்கோ ஆரம்பிச்சது இல்லீங்கோ!!!!! உள்ளேயே தூங்கிட்டு இருக்க ஜென்மப் பகை.

ஊர்ப் பாசத்தோட கவாஸ்கர் மும்பை வீரர்களத் தூக்கிப் பிடிக்கிறத பார்த்திருப்பீங்க. ஆனா ரெண்டு பேருமே டெல்லியை சேர்ந்தவங்கதான் அப்படினாலும் இவங்க ரெண்டு பேருமே எதிரெதிர் துருவங்கள்தான். 2009ல கோலியோட இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டில ஆடுனப்போ 224 ரன்கள் பார்ட்னர்ஷிப்ப இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அமைச்சாங்க. கோலி 107 ரன்களையும் கம்பீர் 150 ரன்களையும் அடிக்க, கம்பீர் மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் வாங்குனாரு. ஆனா டக்குனு வானத்தைப் போல் அண்ணன் கேரக்டரா மாறி கோலி அத அடுத்த தலைமுறைய ஊக்குவிக்கறேன்னு கோலிக்கு கொடுத்துட்டாரு. அடடானு எல்லோரும் பாராட்டுனாங்க. ஆனா அதுக்கடுத்து ரெண்டு பேரும் அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் மாதிரி முட்டிக்க ஆரம்பிச்சாங்க.

விதை போட்டது 2013ல ஆர்சிபிக்கும் கேகேஆருக்கும் நடந்த ஐபிஎல் போட்டி. அந்தப் போட்டில கோலி அவுட் ஆக கம்பீர் அவரப் பார்த்து ஏதோ முணுமுணுக்க அதக் கேட்டுட்டு பெவிலியனுக்குப் போய்ட்ருந்த கோலி அப்படியே திரும்ப வந்துட்டாரு. மாத்தி மாத்தி ரெண்டு பேரும் வார்த்தையவிட கைகலப்பாகாத குறைதான். சின்னப் பையன்தானேனு கம்பீரும் விடல சீனியர் பிளேயர்ன்ற மரியாதைய கோலியும் தரல. நல்லாவே முட்டிக்கிட்டாங்க.

பொதுவா இப்படி சண்டை போடுற வீரர்கள் போட்டி முடிஞ்சதும் கைகொடுத்துட்டு சிரிச்சுட்டே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைனு பாட ஆரம்பிச்சுடுவாங்க. கோலி பொதுவா அப்படிப்பட்ட வீரர்தான். ஆன் ஃபீல்ட் நடக்குறத ஆஃப் த ஃபீல்டுல கங்காரு மாறி தூக்கிச் சுமக்க மாட்டாரு. பிடிக்கலைனா உறவும் இல்ல பகையும் இல்லைனு விலகிப் போய்டுவாரு. ஆனா கம்பீர் அப்படி இல்ல. முற்றிலும் மாறுபட்டவர். தோனி மேல் அவரு வச்சிருக்க வன்மம் வருஷங்கள் ஓடியும் ஆறாம அவ்வப்போ வெளிப்பட்டுட்டே தானே இருக்கு? கோலி விஷயத்திலும் அதேதான் பண்ணாரு.

கோலிகிட்ட குற்றம் கண்டுபிடிக்கறதுதான் கம்பீரோட பார்ட் டைம் ஜாப் ஆகிடுச்சு. அவரு ஃபார்ம் அவுட் ஆகக் காத்திருந்து மீடியாக்கள்ல போட்டிக்கொரு ஸ்டேட்மெண்ட் விட ஆரம்பிச்சாரு. நல்லா ஆடினார்னு வாழ்த்த என்னைக்கும் வார்த்தைகள் வந்ததில்ல ஆனா மோசமான விமர்சனங்கள கோலியப் பத்தி எழுப்பிட்டே இருந்தாரு. மோசமான ரெக்கார்டாக 49 ரன்கள்ல ஆர்சிபி ஆல்அவுட் ஆனப்போ Well Bowledனு எழுதுன கேக் வெட்டுற அளவு அந்த வன்மம் வெளிவந்துச்சு. ஆஸ்திரேலியால பிங்க் பால் டெஸ்ட்ல 2020 டிசம்பர்ல இந்தியா படுதோல்வி அடைஞ்சது. பேட்ஸ்மேன்கள் குற்றம்னு பார்த்த எல்லோருக்கும் தெரியும். ஆனா முன்னாடி ஆஸ்திரேலியால அற்புதமான சாதனைகள கோலி பண்ணப்பல்லாம் பாராட்டாத கம்பீர் இதுக்கு வரிஞ்சி கட்டிட்டு கோலியோட கேப்டன்ஷிய திட்டித் தீர்த்தார். எல்லா இடங்கள்லயும் கோலியை வச்சு செய்வது கம்பீரின் வாடிக்கை ஆகிவிட்டது. தோனிக்கும் கோலிக்குமான நெருக்கமும் இதுக்கெல்லாம் தூபம் போட்டுச்சுன்னும் சொல்லலாம். கோலி இதைப்பத்தி எல்லாம் மனசுக்குள்ள என்ன நினைச்சாரோ வெளிய கம்பீர் பத்தி பெருசா பேசுனதில்ல.

இந்த சீசனோட முந்தைய போட்டியில லக்னோ கடைசி நிமிஷத்துல ஜெயிச்சப்போ ஆர்சிபி பேர சொல்லி அதுவரை ஆரவாரம் பண்ண ரசிகர்களப் பார்த்து கம்பீர "உஷ்"னு சொல்ல வச்சது அடுத்தடுத்த எபிசோட் தானே ஒழிய அறிமுகக் காட்சிகள் இல்ல. லக்னோ களம் போரிடும் போர்க்களமா மாறுன எல்லாத்துக்கும் ட்ரிக்கர் பாய்ண்ட் அதுனு பலரும் நினைக்கறாங்க. ஆனா அது பல ஆண்டுகளுக்கு முன்னாடியே தொடங்கிடுச்சு. அப்பப்போ கம்பீரோட செய்கைகளும் வார்த்தைகளும் அதோட அனல் அடங்காம உள்ளே புகைஞ்சிட்டே இருக்கவும் காரணமாச்சு.

இந்தப் போட்டில பிரச்சினைகள் எல்லாம் ஓய்ந்த பிறகு கோலி கம்பீர் கைகொடுத்துக் கொண்ட புகைப்படம் வெளிவந்தது. இது இதோடு முடிஞ்சதா இல்லேன்னா ஆண்டுகள் கடந்தும் அப்படியே கனன்று கொண்டிருக்குமான்றத பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

gambhir-kohli
'Koffee with Modi' - இந்தியன் கிரிக்கெட் டீமுக்கு சில ஐடியாக்கள்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com