'ஆண்களே.. 40 வயசாகிடுச்சா?' - நீங்க நோட் பண்ண வேண்டியது இதான்!

20 ப்ளஸ்களில் இருக்கும் பெண்கள் ‘அங்கிள்’ என்று அழைத்தால், உள்ளுக்குள் புழுங்கி யார் மீதேனும் எரிந்து விழுவார்கள்!
ஆண்களே
ஆண்களேடைம்பாஸ்
Published on

ஆண்களுக்கும் மெனோபாஸ் உண்டுங்க... ஷாக் ஆகாதீங்க. 35 ஸ்டார்ட் ஆகி 40 வயதை நெருங்குற ஆண்களை உத்துக் கவனிச்சீங்கனா, அதுக்கான அறிகுறிகளை ஈஸியா கண்டுபிடிக்க முடியும். எப்படி?... இப்படி!

நாலு பேர் கூடுற இடத்துல மனைவி பேரைச் சொன்னதும் முகம் வெளிறிப்போகும். பேசும் வாய்ப்பு வந்தால், மனைவியை ஒரு டைனோஸர் போலவே உருவகப்படுத்திப் பேசுவார்கள். ‘அது கால் பண்றதுக்குள வீட்டுக்குப் போயிடணும், இல்லைனா மண்டகப்படிடா மாப்ளே’ என முகம் சிவந்து நண்பர்களிடம் பதறுவார்கள்!

எவ்வளவு மெனக்கெட்டாலும் குறையாத தொப்பையைக் கரைக்க, காலையில் ஜாகிங், மாலையில் வாக்கிங் என ஏதேதோ பண்ணுவார்கள். ஜிம்மில் ட்ரெட்மில்லில் அதிகம் ஓடுவது 40-ஐ நெருங்கும் ஆண் மக்காள்தான்!

க்ரீன் டீ, ஓட்ஸ் கஞ்சி, பார்லி பாயாசம், சுகர் ஃப்ரீ காபி என இன்ஸ்டன்ட் இடி அமீன்களாய் மாறி, மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பார்கள்.

ஆனால் சிங்கிள் பீரைப் பார்த்ததும் ‘நாளைக்கு ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ரா ஓடினா, கொழுப்பைக் கரைச்சிடலாம்’ என மனசை தேற்றிக்கொண்டு டாஸ்மாக்கிற்குள் நுழைவார்கள்!

ஆண்களே
'ஆகா.. நமக்கு வயசாகிடுச்சு போலயே' - அறிகுறிகள் ஒரு லிஸ்ட்
பேரிளம் பெண்கள் லுக் விடுவதைக் கண்டு, டக்கென முகம் சுளிப்பார்கள். 20 ப்ளஸ்களில் இருக்கும் பெண்கள் ‘அங்கிள்’ என்று அழைத்தால், உள்ளுக்குள் புழுங்கி யார் மீதேனும் எரிந்து விழுவார்கள்!

திடீரென டி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடல்கள் பிடிக்கும். ஆனால், அதைக் காட்டிக்கொள்ளாமல் ‘கஞ்சா பூ கண்ணால’ பாடலைப் பாடுவார்கள். தனிமையில் இருக்கும்போது, ‘அமைதியான நதியினிலே ஓடம்’ என ஹம்மிங் செய்வார்கள்!

ஃபேஸ்புக்கில் ‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல...’ என ஆரம்பித்து கொண்டையை அடிக்கடி காட்டிக்கொள்வதால், அதை மறைக்க வேண்டி ‘பீ கூல் அஸ் குகும்பர் ஃபெல்லாஸ்’ என பீட்டர் ஸ்டேட்டஸ் தட்டிவிடுவார்கள்!

ஆண்களே
'எனக்கு கல்யாண வயசு வந்தது ஒரு குற்றம், கோகிலாவை கண்டது ஒரு குற்றம்..'

இருக்கும் அனைத்து லௌகீக வாட்ஸ் அப் குரூப்பில் சைலன்டாய் குந்திக்கொண்டு ரகசியமாக வரும் சுகானுபவ சங்கதிகளைப் பார்த்து பெருமூச்சுவிட்டு, ‘பெருசா செய்யணும் குமாரு’ என மனதிற்குள் வெறியேற்றிக்கொள்வார்கள்!

வீட்டில் சைலன்டாய் இருந்தாலும் வெளியே வந்ததும் ‘ஹாய் நந்தி’ என ரெமோவாய் மாறிப் பேசுவார்கள். மச்சினிச்சிகள் வீட்டுக்கு வந்தால் மனசுக்குள் பஞ்சவர்ணக்கிளி பறக்க அநியாயத்துக்கு நல்லவனாக மாறி மனைவி மீது அம்புட்டுப் பாசத்தையும் கொட்டுவார்கள்! அட ஆமாம்... என் கொண்டையை மறைக்க முடியாம நானே உளறிட்டேனா...?

அவ்வ்வ்வ்வ்வ்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com