America
America timepassonline

America : கையில் பூங்கொத்துடன் வந்த பத்திரிக்கையாளர் - TV நேரலையில் LOVE Proposal !

அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலையின் போதே தன் காதலிக்கு, சக பத்திரிகையாளர் Propose செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலையின் போதே தன் காதலிக்கு, சக பத்திரிகையாளர் Propose செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் டென்னசி ( Tennessee) பகுதியில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான WRCB-TV இல் கார்னிலியா நிக்கல்சன் பணியாற்றி வருகிறார். இவரது நண்பரான ரிலே நாகல் (Riley Nagel) என்பவரும் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேரலை செய்தி நிகழ்ச்சி ஒன்றில் கார்னிலியா பேசிக்கொண்டிருந்த போது, திடீரென கையில் பூங்கொத்துடம் மோதிரத்துடணும் உள்ளே நுழைந்த ரிலே நாகல் "கார்னிலியா, நான் உங்களுக்காக வேறு யாரும் அறியாத சிறப்புச் செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொன்டானாவில் ஒரு செய்தி நிலையத்தில் நாம் சந்தித்தோம்.

நான் முதன்முறையாகப் பார்க்கும்போதே ​​​உங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நீங்கள் ஒரு அற்புதமான ஆளுமை கொண்டவர், நீங்கள் மிகவும் பிரகாசமாக இருக்கிறீர்கள், நீங்கள் உள்ளே வரும்போது எப்போதும் அறையை ஒளிரச் செய்து, அருகில் இருக்கும் அனைவரையும் சிரிக்க வைக்கிறீர்கள்" என்று கூறினார்.

அவருடைய இந்த வித்தியாசமான Proposal க்கு விருப்பம் தெரிவிக்கும் விதமாக அவர் அணிவித்த மோதிரத்தை ஏற்றுக்கொண்டார் கார்னிலியா.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, பத்திரிகையாளர்களிடமும் பொது மக்களிடமும் வாழ்த்துக்களை வாங்கி குவித்து வருகிறது.

- மு.இசக்கி முத்து.

America
Mysore Pak : உலகின் சிறந்த Street Foods பட்டியலில் இந்திய உணவுகள் என்னென்ன ?
Timepass Online
timepassonline.vikatan.com