
ஐபிஎல் தொடரில் பிரபலமான அணியாகவும் அதிதீவிர ரசிகர்களைக் கொண்ட அணியாகவும் வலம் வரும் அணி பெங்களூரு அணி. அதேநேரம், ஐபிஎல் தொடங்கியதில் இருந்து, 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத அணியாகவும் சோதனையான சாதனை வைத்துள்ளது.
இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர் மைக் ஹெசன். இவரது தலைமையின் கீழ் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது .
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் போனது, அந்த அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. இவருடன் மூன்று ஆண்டுகள் வரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜிம்பாபே அணியின் நட்சத்திர கிரிக்கெட்டராக மட்டுமல்லாமல், உலக முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருந்தார் ஆண்டி ப்ளவர். இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகவும் அணியின் இயக்குநராகவும் இருந்து ஆஷிஸ் கோப்பையும், இருபது ஓவர் உலக கோப்பையையும் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
இவரின் வருகையை RCB ரசிகர்கள் கொண்டாடினாலும், 'கண்ணாடிய திருப்புனா எப்டி ஜீவா வண்டி மூவ் ஆகும்' என சில ஐபிஎல் அணி ரசிகர்கள் வன்மத்தை வீசி வருகின்றனர்.