Dog Lover: ரூ.20 கோடிக்கு நாய் வாங்கி Bengaluru தொழிலதிபர்

எனது வீட்டில் கடபோம் ஹைடருக்கு என தனியாக குளிரூட்டப்பட்ட அறை ஒதுக்கியுள்ளேன். தற்போது கடபோம் ஹைடருக்கு தலைமுடி கொட்டும் பிரச்சினை உள்ளது. அடுத்த மாதம் கடபோம் ஹைடரை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவேன்.
Dog Lover
Dog Lovertimepass

பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.20 கோடிக்கு நாய் வாங்கி, 'யார் சாமி இவரு?' என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள 'கடபோம்ஸ் கென்னல்ஸ்' என்ற நாய் விற்பனை கடையின் உரிமையாளரும் இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவருமான சதீஷ் என்ற தொழிலதிபர்தான் ரூ.20 கோடி கொடுத்து 'காகேசியன் ஷெப்பர்டு' இன நாயை வாங்கி உள்ளார். தனது நண்பரிடம் 1½ வயதாயதான இந்த நாயை வாங்கியுள்ள சதீஷ், அதற்கு 'கடபோம் ஹைடர்' என்று பெயர் சூட்டி உள்ளார்.

இந்த காகேசியன் ஷெப்பர்டு நாய் இனமானது ரஷியா, துருக்கி, சிர்கசியா, ஜார்ஜியா ஆகிய நாடுகளில்தான் பெரும்பாலும் காணப்படும். இந்தியாவில் காண்பது மிகவும் அரிதானது. தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை, அறிவுத்திறன் இந்த நாய் இனத்திற்கு உண்டு எனச் சொல்கிறார்கள். 10 முதல் 12 வருடங்கள் வரைக்கும் உயிர்வாழ கூடியவை.

ஏற்கனவே, 'திபெத்தியன் மஸ்டிப்' இன அரிய வகை நாயை ரூ.10 கோடி ரூபாய்க்கும், 'அலஸ்கன் மலமுடே' இன அரிய வகை நாயை ரூ.8 கோடி ரூபாய்க்கும், கொரியாவைச் சேர்ந்த 'தோசா மஸ்டிப்ஸ்' இன நாயை ரூ.1 கோடி ரூபாய்க்கும் வாங்கி உள்ளார் நாய் பிரியர் சதீஷ்.

இந்த 20 கோடி ரூபாய் நாயைப் பற்றி சதீஷ் கூறுவதைக் கேளுங்கள். "ஐதராபாத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து இந்த காகேசியன் ஷெப்பர்டு இன நாயை 20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினேன். திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் 'கடபோம் ஹைடர்' கலந்து கொண்டு 32 பதக்கங்களை வென்றது. அனைவருடனும் பாசத்துடன் பழகி வருகிறது. எனது வீட்டில் கடபோம் ஹைடருக்கு என தனியாக குளிரூட்டப்பட்ட அறை ஒதுக்கி உள்ளேன். தற்போது கடபோம் ஹைடருக்கு தலைமுடி கொட்டும் பிரச்சினை உள்ளது. இதனால் அடுத்த மாதம் கடபோம் ஹைடரை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவேன்" என்று கூறியுள்ளார்.

Dog Lover
'கொசுவை விரட்டணுமா? நாய் வளர்க்கணுமா?' - அதுக்கும் இருக்கு APPகள்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com