Bihar : 50 மாணவிகளை தேர்வு அறையில் பார்த்து மயங்கிய மாணவன் !

50 மாணவிகளை பார்த்ததும் மணி சங்கருக்கு வியர்த்து பதற்றத்தில் திடீரென மயங்கி விழுந்து காய்ச்சலும் உண்டானது.
Bihar
Bihar Bihar
Published on

ஏய் பிரபு என்ன இதெல்லாம்!

50 மாணவிகளுடன் ஒரே அறையில் அமர்ந்து தேர்வு எழுத பயந்து பீகாரில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் மயக்கம். எங்களுக்கும் கூச்சமாக இருக்கும் இல்ல, அதான் இப்படி!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் மணி சங்கர் நாளந்தா அருகே பிரில்லியண்ட் ஸ்கூல் என்னும் பள்ளியில் இண்டர் மீடியட் தேர்வு எழுதச் சென்றார். அங்கு  மாணவிகளும் தேர்வெழுத வந்திருந்தனர். அப்போது மாணவர் மணி சங்கரின் தேர்வு அறையில் 50 மாணவிகள் மத்தியில், தான் ஒரே ஒரு மாணவராக அமர வைக்கப்பட்டார்.

அறையில் 50 மாணவிகளை பார்த்ததும் மணி சங்கருக்கு வியர்த்து பதற்றத்தில் திடீரென மயங்கி விழுந்து காய்ச்சலும் உண்டானது. இதனால் மாணவர் மணி சங்கர் அங்குள்ள சதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவர் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காட்சிகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே பார்த்து சிரித்திருக்கிறோம். ஆனால் உண்மையில் கேட்கும்போது கொஞ்சம் பாவமாகத் தான் இருக்கிறது.

விடைத்தெரியாமல் கூட தனி அறையில் தைரியமாக தேர்வு எழுதி விடுவார்கள் போல. ஆனால் 50 மாணவிகளுடன் அமர்ந்து தேர்வு எழுதுவதை நினைத்து தான் மாணவன் மயங்கி விட்டானோ என்னவோ?

50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர், பயத்தால் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பதற்றம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக, மணி சங்கரின் உறவினர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Bihar
கன்றுக்குட்டியின் மனு: 'என் அம்மாவ கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா' - விழுப்புரத்தில் வினோதம்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com