Brazil : தொண்டை புண்ணுக்கு Video Games, Icecream பரிந்துரைத்த மருத்துவர் !

இந்த மாதிரியான அலட்சியமான விஷயத்த அப்படியே விடக்கூடாதுனு அந்த மருந்து சீட்ட போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்துல பதிவிட்டாங்க.
Brazil
BrazilTimepassonline

குழந்தைக்கு தொண்டையில புண் ஏற்பட்டத காட்டலான்னு மருத்துவர் கிட்ட கூட்டிட்டு போனா .. மருத்துவர் வீடியோ கேம்ஸ் மற்றும் ஐஸ்கிரீம்ம பரிந்துரைச்சியிருக்காரு.. கடைசில மருத்துவருக்கு வட போச்சே மொமெண்ட் மாதிரி அவரோட வேலையே போயிடுச்சு !!

இந்த வினோதமான சம்பவம் பிரேசில்ல தான் நடந்திருக்கு. ஒசாஸ்கோவ சார்ந்த ப்ரிசில்லா டா சில்வா ராமோஸ் தன்னுடைய குழந்தைக்கு தொண்டையில புண் இருக்கிறது தெரிஞ்சு, அங்க இருக்க அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனாங்க‌. இங்கதான் மருத்துவர் ஒரு வினோதமான பரிந்துரைய கொடுத்திருக்காரு.

தொண்டையில புண் இருக்குமோனு  நினைச்சு கூட்டிட்டு போன குழந்தையுடைய தொண்டைய பரிசோதனை செய்யவே இல்லை. என்ன பண்ணுது ? எங்க வலிக்குது ? எத்தனை நாளா இப்படி வலி இருக்குனு ? எந்த தகவலையுமே மருத்துவர் குழந்தைகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கல...

உடனே ஒரு பேப்பரை கிழிச்சு மருந்து எழுதுறதுக்கு ஸ்டார்ட் பண்ணிட்டாரு... அப்புறம் அந்த மருத்துவர் அந்த குழந்தைகிட்ட உனக்கு எந்த பிளேவர் ஐஸ்கிரீம் பிடிக்கும் ?? அப்படின்னு கேட்டார்.. அந்த குழந்தையும் சாக்லேட் ப்ளேவர்ன்னு குஷியா சொல்லுச்சு..  சரி மருத்துவர் சும்மா கேசுவலா கேட்டு தெரிஞ்சுக்கிறாருனு பாத்தா இதையே  மருந்து சீட்டுல எழுதி கொடுத்திருக்காரு.. இந்த மருந்து சீட்டுல "டெய்லி ஐஸ்கிரீம், கூடவே மொபைல் வீடியோ கேம்ஸ் ப்ரீ பையர்"னு எழுதி கொடுத்து இருக்காரு டாக்டர்.

இத குழந்தையோட அம்மா மருத்துவமனையில கவனிக்கல. சரி டாக்டர் பாத்துட்டாரு அதுக்கப்புறம் என்ன வீட்டுக்கு போக வேண்டியது தான்னு வந்துட்டாங்க... இந்த மருந்து சீட்டை அவங்களுடைய தங்கச்சி பார்த்து ... என்ன ஐஸ்கிரீம், ப்ரீ பையர்னுலாம் இருக்குனு கேக்க ... குழந்தையோட அம்மாவுக்கு ஒரே ஷாக்..

இந்த மாதிரியான அலட்சியமான விஷயத்த அப்படியே விடக்கூடாதுனு  அந்த மருந்து சீட்ட போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்துல பதிவிட்டாங்க. இந்த வினோதமான பரிந்துரைய நெட்டிசன்ஸ் பல வகையில விமர்சனம் பண்ணாங்க.. ஒரு சிலர் இது தகாத விஷயம்னு சொல்லி இருக்காங்க.. இன்னும் ஒரு சிலர் டாக்டர் சும்மா விளையாடிருக்காருனும் சொல்லி இருக்காங்க.. இந்த செயலுக்கு அப்புறம் வினோதமான பரிந்துரைய கொடுத்த மருத்துவர பணியில இருந்தே நீக்கி இருக்கு மருத்துவமனை நிர்வாகம்.

கண்டிப்பா அந்த அம்மாவோட ரியாக்சன் "இல்ல எனக்கு புரியல"  அப்டின்ற மாதிரி தான்  இருந்திருக்கும்..

மருந்து சீட்டுல ஐஸ்கிரீம், வீடியோ கேம்ஸ்னு எழுதி கொடுத்தது கொஞ்சம் ஓவர்ரா தான் இருந்துச்சு....

Brazil
கன்றுக்குட்டியின் மனு: 'என் அம்மாவ கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா' - விழுப்புரத்தில் வினோதம்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com