CWC23 : பூம் பூம் Shahid Afridi யும் அதிவேக சதங்களும் ! | Pak Cricket

இலங்கைக்கு எதிரா 37 பந்துகள்ல சதமடிச்சு சப்த நாடியையும் ஒடுங்க வச்சவரு அஃப்ரிடி. அது சச்சினால வக்கார் யூனிஸுக்குக் கொடுக்கப்பட்ட பேட்டால அடிக்கப்பட்டது அப்படின்றது கூடுதல் தகவல்.
Afridi
Afriditimepass

அதிவேக சதங்களும் அஃப்ரிடிக்குமான பிணைப்பு பைனரி நம்பர் சிஸ்டத்துக்கும் 0, 1 என்ற எண்களுக்கும் இடையே இருக்கறதப் போன்றது.

முதன்முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குன ஒருநாள் போட்டிலேயே இலங்கைக்கு எதிரா 37 பந்துகள்ல சதமடிச்சு சப்த நாடியையும் ஒடுங்க வச்சவரு அஃப்ரிடி. அது சச்சின் டெண்டுல்கரால வக்கார் யூனிஸுக்குக் கொடுக்கப்பட்ட பேட்டால அடிக்கப்பட்டது அப்படின்றது இன்னொரு கூடுதல் தகவல்.

நாளொரு அரைசதமும் பொழுதொரு சதமும் அடிக்காட்டியும் களத்துல இருக்க கொஞ்ச நேரத்துல கண்ணி வெடி மாதிரி பெரிய தாக்கத்த ஏற்படுத்துவது தான் பூம் பூம் அஃப்ரிடியோட ஸ்டைல். எப்பவும் Unpredictable Afridi ஆகவே தான் அவரு வலம் வந்தாரு, அதுதான் அவரை தனித்துவமா காட்டுச்சு.

அஃப்ரிடிக்கும் அதிவேக சதங்களுக்குமான எவர் க்ரீன் லவ் ஸ்டோரி ஆசியக் கோப்பையிலும் ரெண்டு முறை நடந்தேறுச்சு அதுவும் ஆறு நாட்கள் கேப்ல. 2010 ஆசியக் கோப்பை சீசன்ல தொடரோட முதல் போட்டியில இலங்கைய அதோட மண்ல பாகிஸ்தான் சந்திச்சது அதுவும் அஃப்ரிடியோட கேப்டன்ஷில. தலைமைப் பொறுப்பு அவருக்குள்ள இருந்த மொத்த திறனையும் தோண்டி எடுத்துட்டு வந்துடுச்சுன்னு சொல்லணும்.

Afridi
IPL சுவாரஸ்யங்கள் : Ashwin Cricket Scientist ஆன கதை தெரியுமா? | IPL 2023

இன்டெண்ட்ன்ற வார்த்தைக்கே இனிசியல் தர்ற மாதிரியான ஒரு இன்னிங்ஸ்ல அஃப்ரிடிகிட்ட இருந்து வந்துச்சு. வழக்கமா உள்ளே வந்ததுல இருந்த அவசரமா ஆடி எப்போ கிளம்பப் போறாரோன்ற பதற்றத்துலயே அவங்க நாட்டு ரசிகர்கள வச்சுக்குறது அவரோட வழக்கம். ஆனா இந்தப் போட்டில ஒரு நிதானத்தோடவே இந்த சேஸிங்க கட்டமைச்சுருந்தாரு. தசைப்பிடிப்புல ஒரு பக்கம் கஷ்டப்பட்டாலும் அதையும் பொருட்படுத்தாம அதைக் கொஞ்சமும் வெளிக்காட்டாம மலிங்கா, முரளிதரன் வீசுன பந்துகளக் கூட அடிச்சு வெளுத்தாரு.

வெறும் 68 பால்ல சதமடிச்சு அடிக்க வேண்டியதுல பெரும்பாலான ரன்கள அவரே எடுத்துட்டாரு. மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பா ஆடியிருந்தா பாகிஸ்தானோட வெற்றி சுலபமாக இருந்திருக்கும். இந்த ஏமாற்றத்த துடைத்தெறிய இதைவிட பெட்டரான ஒரு இன்னிங்ஸ்ல அடுத்த ஆறு நாட்கள்ல அஃப்ரிடி ஆடினாரு.

Afridi
Thug Life Cricketers : கிரிக்கெட்டின் ராக்கி பாய் Vivian Richards !

பங்களாதேஷுக்கு எதிரா தம்புல்லால நடந்த தொடரோட ஐந்தாவது போட்டி அது. கேப்டன்ற பொறுப்பையும், ஜெயிச்சே தீரணும்ன்ற வெறியையும் அந்த இன்னிங்ஸ்ல அஃப்ரிடிகிட்ட பார்க்க முடிஞ்சது. 4 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் வரிசைகட்டி வந்தது. வெறும் 53 பந்துகள்லயே சதமடிச்சுட்டாரு அஃப்ரிடி. அப்புறமும் வேகம் தணியாம அடுத்த 7 பந்துகள்ல 124 வரை கொண்டு போய் நிறுத்திட்டுதான் வெளியேறினாரு.

அசால்ட்டா 385 ரன்களை பாகிஸ்தான் வாரிக் குவிக்கக் காரணம் அஃப்ரிடியோட அடைமழை இன்னிங்க்ஸ் தான். ஆசியக் கோப்பை வரலாற்றுல அடிக்கப்பட்ட அதிவேக சதம் அது. கடந்த வருடம் டி20 ஃபார்மட்ல ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகள்ல செஞ்சுரி அடிச்சு விராட் கோலி அஃப்ரிடியோட ரெக்கார்ட சமன்படுத்துனார் ஆனா ஒருநாள் ஃபார்மட்ல இன்னமும் அதை யாராலும் ப்ரேக் பண்ண முடியல.

ஆசியக் கோப்பையில் அதிவேக சதங்களுக்கான பட்டியலில் முதல் ஐந்து இடங்கள்ல இரண்டு ஸ்பாட்ல நங்கூரமிட்டு அஃப்ரிடி தான் உட்கார்ந்திருக்காரு.

Afridi
IND vs AUS : 'Sachin இதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட' - Dennis Lilleev| ThugLife Cricketers

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com