சென்னையில வாடகை வீடு தேடிருக்கீங்களா? - House owner அட்ராசிட்டீஸ்

‘24 மணி நேரமும் தண்ணி வரும்’னு சொல்லுவாங்க. அப்புறம்தான் தெரியும், மாடி போர்ஷன்ல இருக்குற ஒரு பக்கி டெய்லி ஃபுல் தண்ணியில வருவாப்ளனு.
House owner
House owner டைம்பாஸ்

சென்னையில் வாடகைக்கு வீடு பார்ப்பது பாத்திரக்கடையில் சத்தம் இல்லாமல் பாத்திரம் வாங்குவதற்குச் சமம். எத்தனை எத்தனை வினோத அனுபவங்கள்.

‘24 மணி நேரமும் தண்ணி வரும் சார்’னு சொல்வாங்க ஹவுஸ் ஓனர்ஸ். குடிவந்த பிறகுதான் தெரியும், மாடி போர்ஷன்ல இருக்குற ஒரு பக்கி டெய்லி ஃபுல் தண்ணியில வந்து போன்ல யார்கிட்டயோ சலம்பிட்டு பின்னிரவில் உங்க தூக்கத்தைக் கெடுத்திட்டு நிம்மதியாத் தூங்கும். அதனால ஆரம்பத்திலேயே ‘எந்தத் தண்ணி ஐயா?’னு தெளிவாக் கேட்டுக்கோங்க. இல்லைனா கஷ்டம் ப்ரோ.

‘வீடு நல்லா, காத்தோட்டமா இருக்கும்’னு புளுகி இருப்பார் உங்க வீட்டுக்காரர். குடோனைக் கொஞ்சம் ‘ஆல்டர்’ செய்து அமைக்கப்பட்ட அந்த வீட்டுக்கு இருக்கும் ஒரே ஜன்னல் வழியாக வெயில் காலத்திலும் கூவ வாடை அடிக்கும். அப்புறம் கதவைத் திற... கூவம் வரட்டும்தான் பாஸ்.

House owner
'விடாமல் துரத்தும் விஜயகாந்த்' - வெளியூர் பஸ் அட்ராசிட்டீஸ்

‘தனித்தனி போர்ஷன் சார்... எல்லோரும் எஜுகேட்டட் பீப்புள். எந்தத் தொந்தரவும் இருக்காது’னு சொல்லி இருப்பார் உங்க வீட்டுக்காரர். ஆமா... ஊரில் அப்பா இறந்த தகவலைக் கேட்டு அழுதுகொண்டிருக்கும் நபரைப் பார்த்து, ‘ஏன் சார் அழறீங்க?’னு கூட கேக்கமாட்டார்கள் இந்த எஜுகேட்டட் ஃபேமிலி.

‘எந்தத் தொந்தரவும் இருக்காதுங்கிறதோட எந்த உதவியும் இருக்காது’ங்கிறதையும் தெளிவாச் சொல்லி இருக்கலாமே ஐயா.

மனுஷத் தொந்தரவுதான் இருக்காது. எலியும் பெருச்சாளிகளும் விருந்தாளிகளாய் வந்து போறதைச் சொல்ல மறந்திருப்பாங்க. ஆசை ஆசையாய் வாங்கிய பீட்டர் இங்லாண்ட் சட்டையை சைட் டிஷ்ஷாக அவை காலி செய்றப்போ ஜென் நிலையிலா இருப்பீங்க?

‘கரன்ட் பில்லெல்லாம் டிவைடிங்தான் சார்... அதனால பெரிய சுமையா இருக்காது’னு கூலா சொல்வாங்க. ஆனா, யூனிட்டுக்கு ஒன்பது ரூபாய் வாங்கும் கொள்ளையை சொல்ல மறந்திருப்பாங்க.

House owner
தொடர்: 90-ஸ் கிட்ஸ கிரிக்கெட் - 'Street Cricket Rules'

‘ஊரான் நெய்யே என் பொண்டாட்டி கையே’ங்கிற மாதிரி யார் யாரோ யூஸ் பண்ணின ஏ.சி, வாஷிங் மெஷினுக்கு உங்க பர்ஸை மொத்தமாக் குறி வெச்சுத் தாக்குறதைக்கூட மன்னிச்சுடலாம். ஒரு துண்டுச் சீட்டுல அவங்க எழுதிக் கொடுக்குற கரன்ட் பில் பார்த்தா ஷாக்கடிக்கும்.

‘ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி டேங்க். வாரத்துக்கு ரெண்டு வாட்டி தண்ணி ஏத்திடுவோம்’னு வக்கணையாச் சொல்வாங்க. அது என்னமோ உண்மைதான். ஆனா, நீங்க அசந்த சமயம் நைட்டியை மடிச்சுக் கட்டிட்டு உங்க டேங்குத் தண்ணியை தன் டேங்குக்கு அழகா ஷிஃப்ட் செஞ்சிருப்பாங்க கீழ் போர்ஷன் ஆன்ட்டி.

நாலாவது நாள் மூஞ்சி கழுவக்கூட தண்ணி இல்லாம அவதிப்படுறப்போ எதுவும் நடக்காத மாதிரி மஞ்சக் குளிச்சு தலைகாயப்போட மொட்டை மாடிக்கு வர்ற அந்த ஆன்ட்டி வைரஸைப் பார்த்து சிரிக்கவா செய்வீங்க?

House owner
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'ஆட்டுக்கார அண்ணாமலை'

‘கருவாடு வறுக்கக் கூடாது’, ‘பத்து மணிக்கு வெளி கேட்டைப் பூட்டிருவோம்’, ‘பைக்கை ரோட்டுலதான் பார்க் செஞ்சுக்கணும்’, ‘பத்து மணிக்கு மேலே டி.வி போடக் கூடாது’, ‘சொந்தக்காரங்க ஒரு வாரம் ஸ்டே பண்ணினா, தண்ணி சார்ஜ் எக்ஸ்ட்ரா கொடுக்கணும்’னு எக்கச்சக்க கண்டிஷன்ஸ்.

‘ஒண்டுக்குடித்தனக் கூட்டுக் குடுமி கண்டுபிடித்தது ரப்பர் வளையல்’னு ஒரு சொல்லாடல் இருக்கு. நீங்க புதுசா கல்யாணம் ஆகிக் குடி வந்திருந்தா ஃபாலோ செஞ்சுக்கோங்க. ஏன்னா சத்தம் கேட்குதுனு உங்களை வேற வீடு பார்த்துக்கங்கனு சொன்னாலும் சொல்வாய்ங்க!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com