Kerala : குழந்தைகளின் பிறந்த நாள் எண்களில் லாட்டரி சீட்டு: கேரள நபருக்கு ரூ. 33 கோடி பரிசு!

“என்னுடைய பரிசுப் பணத்தை நான் என் குழுவில் 19 பேருடன் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள உள்ளேன். சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் போதுதான் அது மென்மேலும் பெருகிறது” என்கிறார்.
Kerala
Kerala டைம்பாஸ்
Published on

அரபு நாட்டில் பணிபுரியும் கேரளத்தைச் சேர்ந்த 40 வயது இந்தியர் ஒருவருக்கு 15 மில்லியன் திர்ஹாம்ஸ் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 33 கோடி) லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் அரிக்காட். அல்-ஐயினில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாகவே லாட்டரி சீட்டுகள் வாங்கி வருகிறார். ஆனால் முதல் முறையாக, அதுவும் லம்பாக பரிசு அடித்து இருப்பது இதுவே முதல் முறை என்கிறார்.

அதிலும் குறிப்பாக, அவர் பிக் டிக்கெட்டில் வாங்கியதென்னவோ 2 லாட்டரிச் சீட்டுகள்தான். ஆனால், 4 லாட்டரி சீட்டுகள் சிறப்பு பரிசு கூப்பனாக அவருக்கு கிடைத்தன. அதிலும், அந்த சிறப்பு பரிசு கூப்பனாக கிடைத்த சீட்டுக்குத்தான் இந்த மெகா பரிசு விழுந்துள்ளது.

அந்த சீட்டின் எண்கள் அவர்களின் இரு குழந்தைகளின் பிறந்த நாள் தேதிகள் ஆகும். 7, 13 என்ற எண்களைக் கொண்டு முடியும் இந்த லாட்டரி சீட்டுகளை அவரும், அவரின் மனைவியும் இணைந்தே தேர்வு செய்துள்ளனர். இரு மாதங்களுக்கு முன்பும் அவர் இதே போல குழந்தைகளின் பிறந்தநாள்களை எண்களாகக் கொண்ட லாட்டரி சீட்டைத்தான் வாங்கியுள்ளார். ஆனால், 1 மில்லியன் திர்ஹாம்ஸை ஒரிரு எண்களில் இழந்துவிட்டதாகவும், ஆனால் தற்போது வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியுளிப்பதாகவும் அவர் கலீல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாத ராஜீவ், “என்னுடைய பரிசுப் பணத்தை நான் என் குழுவில் 19 பேருடன் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள உள்ளேன். சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் போதுதான் அது மென்மேலும் பெருகிறது” என்கிறார்.

- மு. ராஜதிவ்யா.

Kerala
Bonda Mani : Vadivelu எனக்கு எந்த உதவியும் செய்யல - போண்டா மணி பேட்டி

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com