China
Chinatimepass

China : திருட சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்!

சுருட்டு பற்ற வைத்து புகைத்துக்கொண்டிருக்கும் போதே தன்னை அறியாமல் கண் அயர்ந்து தூங்கியிருக்கிறார். மேலும் குறட்டை விட்டுள்ளார்.
Published on

நாம் அனைவரும் இந்த உலகில் பல்வேறு விசித்தரமான திருடர்கள் மற்றும் திருட்டின்போது அவர்கள் செய்யும் பல குறும்புகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நான் சொல்லப்போகும் திருடனின் கதையே வேறு..!

தென்மேற்கு சீனாவில் யுனான் மாகாணத்தில் உள்ள டாங் என்வரின் வீட்டில் திருட சென்ற திருடன் யாங் குறட்டை விட்டு தூங்கியதால் போலீசாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகி வருகிறது. இந்த சம்பவத்தன்று வீட்டுக்குள் சென்ற திருடன், வீட்டில் இருப்பவர்கள் பேசி கொண்டிருப்பதை கவனித்துள்ளார். அதனால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கும் வரை காத்திருக்கலாம் என திட்டம் தீட்டிய திருடன் வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் பதுங்கியுள்ளார்.

அப்போது புகைப்பிடிக்கலாம் என்று நினைத்த திருடன் சுருட்டு பற்ற வைத்து புகைத்துக்கொண்டிருக்கும் போதே தன்னை அறியாமல் கண் அயர்ந்து தூங்கியிருக்கிறார். மேலும் குறட்டை விட்டுள்ளார். இந்த நிலையில் வீட்டில் உள்ளவர்களும் உறங்கிய நிலையில், சிறிது நேரத்தில் திருடனின் குறட்டை சத்தம் அதிகரித்து வீட்டின் உரிமையாளரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார்.

முதலில் பக்கத்து வீட்டில் இருந்து தான் குறட்டை சத்தம் வருகிறதோ என கருதியவர் மீண்டும் உறங்கச் சென்றுள்ளார். அப்போது 40 நிமிடங்களுக்குப் பிறகு, தனது குழந்தையின் பால் பாட்டிலைக் கழுவுவதற்காக சமையலறைக்கு சென்ற டாங், ​​குறட்டை சத்தம் அவரின் பக்கத்து அறையில் இருந்து வருவதை கவனத்துள்ளார். அப்போது அறையின் கதவைத் திறந்து பார்த்த டாங் திருடன் ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விட்டு தூங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

டாங் உடனடியாக வீட்டில் உள்ளவர்களை எழுப்பியதோடு, போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருடனை கைது செய்தனர். மேலும் திருடன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், இவர் திருட்டு வழக்கில் இருந்து செப்டம்பரில் தான் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் தற்போது திருட்டை தொடங்கிய போது மீண்டும் மாட்டிக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

- மு.குபேரன்.

China
Tamil Cinema : டிஸ்யூம்.. டிஸ்யூம்.. - துப்பாக்கியும் கையுமாக திரிந்த தமிழ் சினிமா Heroகள் !
Timepass Online
timepassonline.vikatan.com