Dhoni
Dhoni ipl

IPL 2023 : ஒரு சீசன் விளையாடுவேன்னு Dhoni சொன்னார் - Raina கொடுத்த அப்டேட் !

'கடைசியாக மும்பை மேட்சில் தோனியை சந்தித்து பேசியபோது, ஐபிஎல் கோப்பையை வென்ற பின், இன்னும் ஒரு ஐபிஎல் சீசன் விளையாடுவேன் எனக் தோனி கூறினார்." என்று தெரிவித்துள்ளார்.
Published on

நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய ஆட்டத்தில், சுரேஷ் ரெய்னா வர்ணனையாளராக பங்கேற்றார். அதற்குபின், பரிசளிப்பு விழாவின்போது, தோனியும் ரெய்னாவும் சந்தித்து, நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அச்சந்திப்பின்போது, தோனியின் ஓய்வு குறித்த அப்டேட் ஒன்றைப் பெற்றதாக ரெய்னா கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் பேசியபோது, 'கடைசியாக மும்பை மேட்சில் தோனியை சந்தித்து பேசியபோது, ஐபிஎல் கோப்பையை வென்ற பின், இன்னும் ஒரு ஐபிஎல் சீசன் விளையாடுவேன் எனக் தோனி கூறினார்." என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என வர்ணனையாளரிடம் தோனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni
IPL சுவாரஸ்யங்கள் : Virat Kohli ஏன் ஐபிஎல் இல் பௌலிங் போடுவதில்லை? - CSK vs RCB
Timepass Online
timepassonline.vikatan.com