'இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா?’ - இந்தியர்களின் குணாதிசயங்கள் என்னென்ன?

‘இங்கு சிறுநீர் கழிக்காதே’ என்ற போர்டின் கீழ் நின்று ‘சொய்ங்’ போவது, ‘குப்பை கொட்டாதே’ என்ற போர்டைக் கவனித்தும் பேப்பரை வீசி விட்டுப் போவார்கள்!
இந்தியர்களின் குணாதிசயங்கள்
இந்தியர்களின் குணாதிசயங்கள்டைம்பாஸ்
Published on

டி.என்.ஏ டெஸ்ட் செய்து பார்த்ததில் கீழ்க்கண்ட குணாதிசயங்கள் எல்லா இந்தியர்களுக்கும் பொருந்திப் போவதாக அமெரிக்காவின் ஒக்லகாமா பல்கலைக் கழகத்தின் மரபணு ஆய்வுத் துறைதெரிவித்து உள்ளது. (ஹிஹி)

இண்டிகேட்டர் இருந்தாலும் போடாமல் செல்வார்கள். போட்டாலும் லெஃப்ட்டைப் போட்டு ரைட்டில் பறப்பார்கள்!

சொந்தக்காரர்களின் வீட்டுக்கு ஸ்வீட் பழத்தோடு போகிறார்களோ, இல்லையோ நிறைய அட்வைஸ்களைக் கொண்டு போவது... அங்கிருக்கும் டீன் ஏஜ் பையனுக்கு அட்வைஸ் என்ற பெயரில் காதில் ரத்தம்வரும் அளவுக்கு ராவி எடுப்பார்கள்!

'இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா?’ என்று கேள்வி கேட்கும் அதே வாய்தான் ‘நீ எங்காளுப்பா’ என சாதிப் பெருமை பேசும்.

டயட் கன்ட்ரோலுக்காக பார்க் அல்லது பீச்சில் வாக்கிங் போவார்கள். வரும்போது சூப் குடிப்பார்கள். அதில் காரமாக மிக்சரோ, பேபி கார்னோ போட்டு எரித்த கலோரியை ஈடுசெய்வார்கள்!

டிராஃபிக்கில் சிகப்பு சிக்னலை எப்போதாவது கிராஸ் செய்வதில் தப்பேதும் இல்லை என ஆணித்தரமாக நம்புவார்கள். ஆம்புலன்ஸ் வந்தால் பின்னால் போவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்!

அன் ரிசர்வ்டு டிக்கெட்டில் போகும்போது டிக்கெட் கன்ஃபார்ம் ஆகி உட்கார்ந்து செல்பவனைப் பார்த்து ‘கொஞ்சம் காலை மடக்கி உட்கார்ந்தா, நாங்க உட்கார்ந்துக்கலாம்ல’ என்பார்கள். அதே வாய் ரிசர்வேஷன் கன்ஃபார்ம் ஆகி இருந்தால், அன் ரிசர்வ்டு டிக்கெட்டில் ஏறியவனைப் பார்த்து, ‘யோவ், உங்களுக்குனு தனிப்பெட்டி இருக்குயா... டி.டி.ஆர் வர்றதுக்குள்ளே போயிடுங்க’ என அட்டணக்கால் போட்டபடி ’பரதேசி’ ஆண்டை கணக்காகப் பேசுவார்கள்!

பேங்க்குக்குப் பணம் அனுப்பப் போகும்போது பேனா எடுத்துச் செல்ல மாட்டார்கள். அடுத்தவன் பேனாவைத் திருப்பிக் கொடுக்காமல் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்!

‘இங்கு சிறுநீர் கழிக்காதே’ என்ற போர்டின் கீழ் நின்று ‘சொய்ங்’ போவது, ‘குப்பை கொட்டாதே’ என்ற போர்டைக் கவனித்தும் பேப்பரை வீசி விட்டுப் போவார்கள்!

சாட் ஹிஸ்டரியைத் தோண்டிப் பார்த்தால் ‘ஸ்பிரிச்சுவல் ஸோல் ’ , ‘ஹவ் டு பிஹேவ் லைக் ஏ டிவைன் மேன்’, ‘இண்டியன் போர்ன்ஸ்’, ‘ஸ்கேண்டல் வீடியோஸ்’ என கம்ப்யூட்டரே குழம்பும் அளவுக்கு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டியாக வாழ்வார்கள்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com