கு.மு/கு.பி : குடிப்பதற்கு முன்/குடிப்பதற்கு பின்

கு.மு: மாசக் கடைசி பையில பத்து பைசா இல்லடா. கு.பி: நம்ம நாட்டுக்கு எத்தன கோடி கடன் இருக்குனு மட்டும் கேட்டு சொல்லு. மொத்தமா இப்பவே ஜிபேல அனுப்பிவிடுறேன். இல்ல போன்பேல அனுப்பவா?
கு.மு/கு.பி : குடிப்பதற்கு முன்/குடிப்பதற்கு பின்

குடிப்பதற்கு முன் : மச்சி ரோட்ல எல்லாம் பிஸ் அடிக்கக் கூடாது. வா டாய்லட் போலாம்.

குடிப்பதற்கு பின் : ரோட்ல பிஸ்தானடா அடிக்கிறோம். நாம என்ன கிஸ்ஸா அடிக்கிறோம்? புஹாஹாஹஹா.. போடா... போடா..

கு.மு: மாசக் கடைசி பையில பத்து பைசா இல்லடா..

கு.பி: டேய்.. என்னடா இந்தியா ஏழை நாடு..? நம்ம நாட்டுக்கு எத்தன கோடி கடன் இருக்குனு மட்டும் கேட்டு சொல்லு. மொத்தமா இப்பவே ஜிபேல அனுப்பிவிடுறேன். இல்ல போன்பேல அனுப்பவா?

கு.மு: என்ன ஏமாத்திட்டு போய்ட்டாடா அவ.. அவள சும்மா விடக் கூடாது.

கு.பி: பாவம் மச்சான்.. அவ என்ன பண்ணுவா.. ரெக்க இல்லனாலும் அவ ஒரு தேவதைடா. அவ கல்யாணத்துக்கு ரெண்டு செட்டு ரெக்கைய தச்சு கிப்ட்டா குடுக்கலாம்டா.

கு.மு: ராத்திரியானா இந்த தெரு நாய்க தொல்ல தாங்கலப்பா.

கு.பி: (தெரு நாயைக் கட்டியணைத்தப் படி) நீ எதிர்த்த வீட்டு பப்பி நாய லவ் பண்ணிட்டிருந்தல? வேணா மச்சா வேணா இந்த பொண்ணுங்க காதலு.. இந்த பார்த்தா சொல்றேன் கேளு

கு.மு: ட்ரிங்கிங் இஸ் இன்ஜூரியஸ் டு ஹெல்த்னு எத்தன படத்துல போடுறாங்க. திருந்துங்க ப்ரோ.

கு.பி: என் வாயி என் குடலு.. தேக்குடா என் குடலு. கத்திய குத்தி பாக்குறீயா? அடிங்க குத்துடானா?

கு.மு: (மனைவியிடம் போனில்) என்னம்மா சாப்பாடு? நான் எதும் வாங்கியாரவா?

கு.பி: அலோ நான்தான்டீ உன் ஒயிப் பேசுறேன். ஆமாடீ.. லன்ச் ரெண்டு கிலோ வாங்கி, கோழிக்கு சமச்சு வையி.. நான் வரேன்..

-அரவிந்த்ராஜ் ரமேஷ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com