England : விமான கழிவறைக்குள் பாலியல் செய்கை - விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தம்பதி!

கடந்த சில ஆண்டுகளாக விமானத்தில் பல்வேறு விசித்தரமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், தற்போது நடந்த நிகழ்வோ 'வேற' ரகம்!
England
Englandtimepass

கடந்த சில ஆண்டுகளாக விமானத்தில் பல்வேறு விசித்தரமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், தற்போது நடந்த நிகழ்வோ 'வேற' ரகம்! இங்கிலாந்தில் உள்ள லூட்டனில் இருந்து ஐபிசா செல்லும் உள்நாட்டு ஈஸிஜெட் விமானத்தில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகள், விமானத்தின் கழிவறையில் பாலியல் செய்கைகளில் ஈடுபட்ட சம்பவம் தான் அது! இதைப் பயணிகளில் சிலர் கேமராவில் படம் பிடித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஐந்து மில்லியனுக்கும் அதிகமான முறை பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், பயணிகளின் கவனம் முழுக்க கதவின் மீது இருக்கும் போது, விமானப் பணியாளர் ஒருவர் கழிவறையின் கதவைத் திறக்கிறார். அப்போது உள்ளே ஆணும் பெண்ணும் ஆடைகளின்றி எசகுபிசகான நிலையில் இருந்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட அந்த தம்பதியரில் ஆண் நபர், ஊழியர்கள் மற்றும் சக பயணிகளைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் கதவை உடனடியாக மூடினார்.

England
Asia Cup 2023 : 'சூர்யாவ உரசாதீங்க சார்' - ஆசியக் கோப்பையின் Beast Jayasuriya | Pak vs SL

அந்தக் காட்சியைக் கண்ட சக பயணிகளின் எதிர்வினை, ஆரவாரம் மற்றும் கூச்சல்களின் கலவையாக இருந்தது. சிலர் வெட்கப்பட்டு, அதிர்ச்சியுடன் வாயை மூடிக்கொண்டனர். இதற்கிடையில், விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் கழிவறையில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட ஜோடியின் தைரியத்தைப் பாராட்டினர். 

மேலும் விமானக் குழு உறுப்பினர்கள் இந்த சம்பவத்தைக் கண்டு இதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். விமானம் ஐபிசா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் அந்தத் தம்பதியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை.

இந்த நிலையில், விமானத்தில் இதுபோன்ற பாலியல் சேட்டைகளில் ஈடுபடுபவர்களை  வெளிப்படையாகத் தண்டிக்க 'யுகே' சட்டம் எதுவும் இல்லை என்றாலும், பாலியல் குற்றங்கள் சட்டம் 2004 இன் பிரிவு 71 கீழ் பொது கழிப்பறையில் வேண்டுமென்றே பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது குற்றமாகக் கருதப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன மாதிரியான தண்டனை கிடைக்கிறது என்று! 

- மு.குபேரன்.

England
America : Vitamin மாத்திரை என நினைத்து Apple Airpods-ஐ விழுங்கிய பெண் ! - அப்புறம் என்னாச்சு?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com