Decoding பொண்ணு பாக்கப் போற ஃபங்ஷன் - ஓ இதுக்கு இதான் அர்த்தமா?

Decoding பொண்ணு பாக்கப் போற ஃபங்ஷன் - ஓ இதுக்கு இதான் அர்த்தமா?

"பொண்ணுக்கு பெரியவுங்கன்னா அவ்வளோ மரியாதை" - மாமனார் மாமியாரை அடிக்க மாட்டா. மாப்பிள்ளைய மட்டும்தான் பின்னி எடுப்பா.
Published on

90ஸ் கிட்ஸுகளா.. பொண்ணு பாக்கப் போறதுக்கு முன்ன இந்த ஆர்ட்டிகள ஒருக்கா படிச்சுக்கோங்க...

"பொண்ணைச் செல்லமாக வளர்த்து விட்டோம்"

- அதாவது பொண்ணுக்கு ஒரு வேலையும் தெரியாது நீங்க தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் மாப்பிள்ளை.

"மாப்பிள்ளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது"

- ஆமா மாப்பிள்ளை அபின், ப்ரௌன் சுகர் எல்லாம் அடிக்க மாட்டார். இதுவரைக்கும் ஒரு கொலைக் கூட பண்ணதில்லைனா பாத்துக்கோங்க.

"என் பொண்ணுக்கு வீடு சுத்தமா இருக்கணும்"

- அதனால ஒரு வேலைக்கார பெண், ஒரு சமையற்காரர், ஒரு தோட்டக்காரர் வச்சுக்கணும்.

"பொண்ணுக்கு/பையனுக்கு குழந்தை மனசு"

- ஆமா.. திருவிழா, கண்காட்சினு போனா கைய கெட்டியா புடிச்சுக்கோங்க.

"பையன் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கான்"

-ப்ளஸ் டூல பிட் அடிச்சு பாஸ் ஆகி, நாலு வருச டிகிரி கோர்ஸ்ஸ எட்டு வருஷத்துல முடிச்சான்.

"பொண்ணுக்கு பெரியவுங்கன்னா அவ்வளோ மரியாதை"

- மாமனார் மாமியாரை அடிக்க மாட்டா. மாப்பிள்ளைய மட்டும்தான் பின்னி எடுப்பா.

"பையன் ரொம்ப பொறுமைசாலி"

- காலை பதினோரு மணிக்குத்தான் எழுந்திருப்பான்.

Timepass Online
timepassonline.vikatan.com