யானை மற்றும் புலிக்கு உதவி செய்த CSK சிங்கம் Dhoni! | IPL season-16

'The Elephant Whisperers' ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கான்சேல்வஸ் மற்றும் ஆவணப்படத்தின் நாயகர்கள் பொம்மன்-பெல்லி தம்பதியை வரவழைத்து மகிழ்வித்தது. தோனியின் அழைப்பை ஏற்று வந்திருந்தார்கள்.   
dhoni
dhonitimepass

IPL 16-வது சீசன்...55-வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கோலாகலமாக துவங்கப் போகிறது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் ஹோம் கிரவுண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவிருக்கிறது. 

கடுமையான பயிற்சிகளைக் கடந்த இரண்டு நாட்களாக சென்னை அணி, எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் செய்து வருகிறது. பயிற்சிகளின்போது தோனியின் மகள் ஜிவா தோனியும் தந்தையோடு கூடவே சின்னச் சின்ன பயிற்சிகளில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் ஆனது. நேற்று கூடுதல் சிறப்பாக சமீபத்தில் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதினை ஆவணப்படப் பிரிவில் வாங்கிய ' The Elephant Whisperers' படத்தின் இயக்குநர் கார்த்திகி கான்சேல்வஸ் மற்றும் ஆவணப்படத்தின் நாயகர்களான பொம்மன் - பெல்லி தம்பதியையும் நேரில் வரவழைத்து மகிழ்வித்தது. தோனியின் அழைப்பை ஏற்று அவர்கள் நேற்று வந்திருந்தார்கள். 

தோனியும் சி.எஸ்.கே அணியும் ஜெர்ஸி உள்ளிட்ட நினைவுப்பரிசுகளை வழங்கியதோடு முதுமலை புலிகள் காப்பகத்திற்கான புனரமைப்பிற்கும், யானைகள் பராமரிப்புக்கும் நிதியுதவியினை வழங்கியது குறிப்படத்தக்கது!

சூப்பர் தல! 

- சமர்

dhoni
Timepass Edits: 'தல' தோனி

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com