இளையராஜா பாடலும் மதுபோதையும் : திருட சென்ற வீட்டில் உறங்கிய திருடன் !

திருடிய பொருட்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மதுபோதையில் பெட்ரூம் மெத்தையில் படுத்து தூங்கிய சிவகங்கை திருடன்.
இளையராஜா
இளையராஜாtimepass

காமெடி சீன் ஒன்றில், வடிவேல் ஒரு வீட்டில் திருடப்போகும் போது, போலீஸ் அவரை ரவுண்டப் செய்துவிடும். அதன்பிறகுதான் தெரியும் அண்ணனின் 100வது திருட்டு என்று தன் கூட்டாளிகள் பேனர் வைத்திருப்பது. பிரபலமான அந்த காமெடியைப் பார்த்தால் சிரித்தே வயிறு வலிக்கும்.

அந்த காமெடி சீனை மிஞ்சும் வகையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு நிஜ சம்பவம் நடந்திருக்கிறது. இந்த சம்பவத்தில், திருடிய பொருட்களை எல்லாம் ஆங்காங்கே மூட்டை கட்டி வைத்துவிட்டு, மதுபோதையில் பெட்ரூம் மெத்தையில் படுத்து திருடன் தூங்கி இருக்கிறான். காலையில் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கியிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் காரைக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில், தன்னுடைய நடுவிக்கோட்டை வீட்டிற்கு வந்து செல்வார். அதனால், அந்த வீட்டில் தேவையான பர்னிச்சர் பொருட்களை மட்டும் வைத்திருந்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று பாண்டியன் வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் உரிமையாளரான பாண்டியனுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

இளையராஜா
IND vs AUS : 'Sachin இதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட' - Dennis Lilleev| ThugLife Cricketers

நாச்ச்சியாபுரம் காவல் நிலையத்திl பாண்டியன் புகார் கொடுக்க போலீஸாரும் விரைந்து வந்திருக்கின்றனர். உள்ளே சென்ற பார்த்த போதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியே காத்திருந்திருந்திருக்கிறது. வீட்டைப் பிரித்து உள்ளே சென்ற அந்தத் திருடன் ஹாயாக படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். தட்டி எழுப்பி விசாரித்த போது, சைகையிலேயே நீங்க எல்லாம் யாரு, விடிஞ்சிருச்சா என்று கேட்டு போலீஸாருக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

உடனே, அங்கிருந்தவர்கள் அந்த திருடனுக்கு தர்ம அடி கொடுத்திருக்கின்றனர். போலீஸாரின் தயவால் அவர்களிடம் இருந்து தப்பித்து இருக்கிறார். பின்னர், போலீஸார் திருடனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். விசாரணையில், அந்தத் திருடன் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர நாதன் என்பது தெரியவந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "ஏற்கெனவே ஒரு திருட்டு வழக்கில் சிறை சென்று திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த போதுதான், ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு வீட்டிற்குள் இறங்கியிருக்கிறார். பூட்டிக்கிடந்த வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய சுதந்திரதிருநாதன், அங்கிருந்த குத்துவிளக்கு, மின்விசிறி உள்ளிட்ட பண்ட பாத்திரங்களை பத்திரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, நள்ளிரவில் கிளம்பலாம் என்று நினைத்து மது அருந்தியிருக்கிறார். மது அருந்திட்ட, பொருட்களை மூட்டைகட்டிட்ட சரி, ஏண்டா கிளம்பலைன்னு கேட்டப்ப, "கட்டில் மெத்தையில், படுத்திருந்து நள்ளிரவுக்கு மேல போகலாம்னு நெனச்சேன். ஹெட்போனில் கொஞ்ச நேரம் இளையராஜா பாடல்களை கேட்டவாறு அயர்ந்து உறங்கிவிட்டேன் என்று கூலாக கூறினான்" என்றனர் அதிர்ச்சி விலகாமல்.

திருட்டாக இருந்தாலும் தொழிலில் நேர்மை இல்லாததால் சுதந்திரநாதன் இன்று ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

- செ. சல்மான் பாரிஸ்.

இளையராஜா
Japan : ஜப்பான் தீவை சூழ்ந்த காகங்கள் - வைரலாகும் வீடியோ !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com