'உப்புமா.. தப்பும்மா' - இது பேச்சுலர் சமையல்

‘வெள்ளை நிறத்தில் இருக்கும்; உப்புமா இல்லை. இனிப்பாய் இருக்கும்; ஆனால் கேசரி இல்லை’ என்று விடுகதை போட வைத்தது உப்புமா.
உப்புமா
உப்புமாடைம்பாஸ்

பேச்சுலர் சமையலும் பிறக்கப் போகும் குழந்தையும் ஒண்ணுதான். பெயரை ஆரம்பத்திலேயே வைத்துவிட முடியாது. வீட்டைப் பிரிந்து வேலை பார்க்கும் நாட்களில்தான் பேச்சுலரின் முதல் சமையல் முயற்சி ஆரம்பிக்கிறது. பேச்சுலர் என்பதால் இதைக் ‘கன்னி’ முயற்சி என்றாலும் மிகையாகாது.

எந்த ஒரு செயலும் பிள்ளையார்சுழி போட்டுத் தொடங்குவதைப் போல, முதன் முதலில் எல்லோரும் பரீட்சித்துப் பார்ப்பது ‘உ’ப்புமா. இப்படித்தான் ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் உப்புமா வைக்கும் பணி துவங்கியது.

முதல் முயற்சி என்பதால் பாத்திரம் சுத்தமாக இருந்தது. வாணலியை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கும் வேளையில்தான், உப்புமாவில் கடுகு, மிளகாய், வெங்காயம் இவற்றைக் கண்டிருக்கிறோமே என்ற யோசனை வந்தது எல்லோருக்கும்.

தாளிப்பதைத் தாண்டிவிட்ட‌ நிலையில் இருப்பதை உணர்ந்து, அவசரநிலைப் பிரகடனமாக‌ அதை கேசரியாக மாற்றிவிடுவதாக ஏகமனதாய் முடிவு செய்தோம்.

எந்தவொரு விஷயத்தையும் இனிப்போடுதானே ஆரம்பிக்க வேண்டும் என்ற உண்மை உறைத்தது. இதே மிளகாய் போட்ட உப்புமாவாக இருந்திருந்தால் உண்மை ‘உரைத்திருக்கும்’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டோம்.

உப்புமா
விசித்திர மரணங்கள் - ஒரு லிஸ்ட்

கேசரி திடீர் முடிவு என்பதால், கேசரி பவுடர், முந்திரிப் பருப்பு எதுவுமில்லை. விலையில்லா அரிசி இருக்கும் தேசத்தில் வண்ணமில்லா கேசரி இருப்பதில் என்ன அதிசயம்? (மச்சி, 10 மணிக்கு பவர் போயிடும், அப்புறம் எதுக்கு கலரெல்லாம். அப்புறம் ஒரு புக்ல படிச்சேன், கேசரி கலர் ரொம்ப கெடுதலாம்டா...)

இருப்பதை வைத்துத் திருப்திப்படும் மனம் எல்லோருக்கும் வாய்க்காது. அது எங்களுக்கு நன்றாகவே வாய்த்திருந்தது. இப்படியாக உப்புமாவும் இல்லாமல், கேசரியும் இல்லாமல் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக ‘அது’ உருவானது.

‘மிஸ்டர்.ஜான், அதோட கலரைப் பார்த்தீங்களா?’ ‘ஆமாம்... அது ரொம்பவே பயங்கரமா இருக்கு. இருந்தாலும் நமக்கு இரவு உணவு அதுதான்.’
உப்புமா
'சீக்கிரமே ஒரு வெப் சீரிஸோட வரோம்' - டெலிவரி காதல் ஜோடியின் பேட்டி

இப்படியெல்லாம் இங்கிலீஷ் படத்தின் டப்பிங் உரையாடல்களை அறையில் பேசவைத்தது அது. ‘வெள்ளை நிறத்தில் இருக்கும்; உப்புமா இல்லை. இனிப்பாய் இருக்கும்; ஆனால் கேசரி இல்லை’ என்று விடுகதை போட வைத்தது.

ருசித்துப் பார்த்தபின், ‘விடுகதையா இந்த வாழ்க்கை... விடை தருவார் இங்கு யாரோ...’ என்று சோகமாகப் பாடவும் வைத்தது. மொட்டை மாடியில், நிலவொளி வீசிக் கொண்டிருக்கும் ரம்மியமான அந்த இ‘ரவை’ உப்புமா, ரசிக்கவிடவில்லை. (கவித! கவித!)

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com