நாளுக்கு நாள் பெட்ரோல் விலை டீசல் விலை மாதிரி ஏறிட்டு வருது. டீசல் விலையும் பெட்ரோல் விலை மாதிரி ஏறிட்டு வருது. சிலர் பைக், கார் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, நடை ராஜா சர்வீஸுக்கு மாறிடலாமானு யோசிச்சுட்டிருக்காங்க.
அவங்களுக்கு ஒரு ஆறுதலான ஐடியாவ கொடுத்துருக்கார் மும்பையைச் சேர்ந்த ஸ்விகி டெலிவரி பாய் ஒருத்தரு.
"என்னங்கடா பெரிய புல்லட்டு, பல்சரு, பெட்ரோலு, டீசலுனு.. குதிரை கேள்விப்பட்டுருக்கீயா? வைக்கோலு?"னு கேக்காத குறையா அந்த டெலிவரி பாய்யோட செயல் இருந்தது.
just a vibe என்ற யூடியூப் பக்கத்தில், just mumbai things என கேப்ஷன் இடப்பட்டு பகிரப்பட்ட இந்த வீடியோ மொத்தமே 5 செகண்ட்தான். மகாராஷ்ட்ர மாநிலம் மும்பைல எடுக்கப்பட்டதா தெரியிற இந்த வீடியோதான் இப்ப இணையவாசிகள் மத்தில வைரல்.
"மகாராஷ்ட்ராதான? அங்க ஓவர் நைட்ல முதலமைச்சரே மாறுறப்ப, ஒரு பைக் குதிரையா மாறாதா என்ன?"னு இணையவாசிகள் கிண்டலடிச்சுட்டிருக்காங்க.
எது எப்படியோ, எரிபொருள் விலையேற்றத்துக்கு பயந்து சைக்கிள், நடைராஜா சர்வீஸ் பக்கம் போறவுங்க, குதிரையையும் ஒரு சாய்ஸ்ஸா வச்சுக்கலாம் மக்களே!