காதலர் வாரம் தொடங்கி விட்டாலே தினமும் காதலர்களுக்கான ஸ்பெஷல் டே ஆரம்பமாகிறது. அப்படி ஸ்பெஷலான நாளை இன்னும் ஸ்பெஷலாக்குவது தான் பிப்ரவரி 10 டெடி டே (Teddy Day). பஞ்சுபோன்ற கரடி பொம்மையை கொடுத்து காதலை கொண்டாடுவதற்கான நாள். டெடியின் வரலாறை தெரிந்து கொண்டால் இந்த நாள் இன்னும் சிறப்பான நாளாக அமையும் அல்லவா!
வரலாறு :
அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் 1902ஆம் ஆண்டு வேட்டைக்குச் சென்றபோது ஒரு கரடியின் மீது காட்டிய இறக்கம்தான் காதலர் தின வாரத்தில் டெடி டே கொண்டாடுவதற்கு முக்கிய காரணம்.
வேட்டையாடும் போது பிடிபட்ட கரடியை அதிபர் இரக்கம் காட்டி சுடாமல் விட்ட நிகழ்வை அங்கிருந்த பெர்ரிமேன் என்ற அரசியல் தலைவர் கார்ட்டூனாக வரைந்து வாஷிங்டன் போஸ்டில் வெளியிட்டர். அந்த கார்ட்டூன் பிரபலமடைந்து. இதுதான் சரியான நேரம் என்று பொம்மை உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொண்டு அதிபரின் செல்ல பெயரில் உருவாக்கப்பட்டது தான் இந்த டெடி பொம்மைகள்.
டெடி ரகசியம் :
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆலன் பீஸ் மற்றும் பார்பரா தம்பதியினர் ”Why men don't listen and women can't read map" என்னும் புத்தகத்தில், குழந்தை வடிவில் குண்டாக, உயரம் குறைவாக இருக்கும் இந்த டெடி பொம்மைகள் தாய்மைக்கான ஹார்மோன்களைச் சுரக்க வைப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த டெடி பொம்மைகள் பாதுகாப்பு மற்றும் அமைதியை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த டெடி கரடி சின்னம் அன்பு மற்றும் ஆறுதலின் பிரியமான சின்னமாக உலக காதலர்களால் பார்க்கப்படுகிறது.
டெடியை காதலுக்கு எப்படி கொடுக்க வேண்டும்
1. சிறப்புச் செய்தி துணுக்குடன் தனித்துவமான டெடியை காதல் இணையருக்கு கொடுத்தால், "நான் எந்நேரமும் நம் காதலை பற்றி சிந்திக்கிறேன்" என்று அர்த்தம்.
எம்பிராய்டரி, லவ் பேட்ச், பேசும் டெடி போன்ற டெடி பொம்மைகள் இந்த நாளை இன்னும் சிறப்பானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றும்.
2. உணர்வை குறிக்கும் வகையிலான நிறமுடைய டெடி பியரை தேர்வு செய்ய வேண்டும். சிவப்பு அன்பையும், இளஞ்சிவப்பு போற்றுதலையும் மஞ்சள் நட்பையும் பச்சை நட்பு, காதலையும், வெண்மை தூய்மையான காதலையும் குறிக்கிறது.