காதலர்களுக்கு வாழ்க்கை காதலிக்கும்போது தேனைப்போல இனிக்கும். ஆனால் காதலில் பிரிவு, ஏமாற்றம் போன்றவை மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். திடீரென காதலர்களில் ஒருவர் பிரேக்-அப் பண்ணிக்கொண்டு பிரிய நேரிடும் போது மற்றொருவர் தற்கொலை முடிவு வரை செல்கிறார்கள். அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் இன்சூரன்ஸ் உள்ளது ஆனால் காதல் பாதிப்புக்கு இன்சூரன்ஸ் உள்ளதா? 'அதெப்படிங்க.... இதுக்கெல்லாமா இன்சூரன்ஸ் இருக்கும்?' என்று கேட்கிறீர்களா..? காதலால் மனரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இன்சூரன்ஸ் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பலைனாலும் அதான் நிஜம்!
காதல் துணை பிரிந்த பிறகு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக மாதாந்திர வைப்புத் தொகையிலிருந்து இதய காப்பீட்டு நிதியாக ரூபாய் 25 ஆயிரம் பெற்றதாக ட்விட்டரில் பிரதீக் ஆர்யன் என்ற இளைஞர் பதிவிட்டுள்ளார்.
அவருடைய காதலி அவரை ஏமாற்றிய பிறகு, 'இதயப் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்டிலிருந்து' பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதீக் ஆர்யன் மற்றும் அவரது காதலியும் ஒரு கூட்டு வங்கி கணக்கில் (Joint account) ஒவ்வொரு மாதமும் ரூ.500 செலுத்தியுள்ளனர். எவர் ஏமாற்றப்படுகிறாரோ, அவர் "ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்" என்று டெபாசிட் செய்யப்படும் அனைத்துப் பணத்தையும் பெறுவார்கள் என்பது அவர்களது ஒப்பந்தம்.
"என் காதலி என்னை ஏமாற்றியதால் எனக்கு ரூ 25000 கிடைத்தது. எங்கள் உறவு தொடங்கியதும் நாங்கள் ஒவ்வொருவரும் மாதந்தோறும் ரூ 500 ஜாயிண்ட் அக்கவுண்டில் டெபாசிட் செய்தோம், யாரை ஏமாற்றினாலும், எல்லா பணத்தையும் விட்டுவிடுவோம் என்று பாலிசி செய்தோம். அதுதான் இதயமுறிவு காப்பீட்டு நிதி (HIF)," என்று ஆர்யன் கூறினார்.
இந்த ட்வீட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர். இந்த "ஹார்ட்பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்" என்ற கான்செப்ட் ஆன்லைனில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ட்விட்டரில் பலர், 'இது ஒரு சிறந்த யோசனை!', 'உசிருக்கும் உத்தரவாதம். பணத்துக்கும் கியாரண்டி', 'யாராவது ஒத்துழைக்க விரும்புகிறீர்களா?' என்று கேளிக்கை கமெண்ட்களைக் கூறியுள்ளனர்.
'அடடா, இது தெரியாம ஏழெட்டு வாட்டி பிரேக்-அப் பண்ணிடேனப்பா' என்கிறீர்களா..?
லின்க்: https://twitter.com/Prateek_Aaryan/status/1636009507238346753?t=y8daBbFIbDJzvjt4dnhZBg&s=19
-கலையரசி