இன்றைய தேதியில் தலையாயப் பிரச்னைகளில் ஒன்று ப்ளடி ஃபேக் ஐ.டிஸ்! பொண்ணுங்களோட பெயர்களில் ஃபேஸ்புக் பக்கங்களில் வான்டடாக போய் சிக்கிச் சின்னாபின்னமானவர்கள் நிறைய பேர்.
இதோ ஃபேஸ்புக் ஃபேக் ஐ.டி பக்கிகளை எப்படி அடையாளம் காண்பது என சிம்பிள் டிப்ஸ்!
ஃபேக் ஐ.டி கொடுத்த நட்புக் கோரிக்கையை டவுட்டோடவே நீங்க அக்செப்ட் பண்ணி வேற வேலையில் பிஸியா இருந்தாலும் அடிக்கடி சாட்டிங்கில் வந்து ‘ஏங்க என்கூடலாம் பேச மாட்டீங்களா?, 'பொண்ணுங்களோட பேசுனா முகத்துல உங்களுக்கு பிம்பிள்ஸ் வருமா?', 'உங்களோட புரொஃபைல் பிக்சர் சோ க்யூட் செல்லம்’ இப்படி எல்லாம் இந்த ஆண்ட்ராய்டு யுகத்திலும் ஓவராய் வழிந்துவைத்தால், சாட்சாத் அது ஃபேக் ஐ.டியேதான்.
ஏன்னா, இப்போவெல்லாம் பொண்ணுங்க ஸ்ட்ரெய்ட்டாவே பாஸ்னு ஃபர்ஸ்ட் சாட்டிங்கிலேயே பேச ஆரம்பிச்சுட்டாய்ங்கடா ஃபேக்பக்கிங்களா!
நொச்சு நொச்சுனு உங்க உசுரைத் தவணை முறையில் வாங்குவானுங்க. சம்பந்தமே இல்லாம உங்க போட்டோக்களுக்கு கமென்ட் போட்டு உங்களை டெம்ப்ட் பண்ணுவானுங்க.
‘எச்சூஸ்மி... உங்க ஒரிஜினல் போட்டோ ப்ளீஸ்’னு நீங்க ஜொள்ளு விடாமலே கேட்டாக்கூட, ‘நிஜமாய் நான் இருக்க... நிழற்படம் உங்களுக்கு எதற்கு?’ என ‘காதல் கோட்டை’ தேவயானி டயலாக்கை அள்ளி விடுவானுங்க.
இந்த இடத்திலேயும் சூதானமா இல்லாட்டி , கடைசில சங்குதான்டி மாப்ளைகளா!!!!