Mataam AI Tur உணவகத்தால Dawat- E- Hyderabadன்ற நிகழ்ச்சி நடக்குது. ஹைதராபாத்துடைய கலை, உணவு மற்றும் கலாச்சாரத்த பிரதிபலிக்கணும்ன்றதுதான் இந்த நிகழ்ச்சியோட நோக்கம்.. இந்த நிகழ்ச்சி திருமண வடிவுல பண்றாங்க...
உணவுன்றது நம்ம கலாச்சாரத்தோட ஒன்றிபோனா ஒன்னு. பெங்களூருல இருக்க உணவுப் பிரியர்களுக்கு ஹைதராபாத்துடய பாரம்பரிய உணவுகள அறிமுகப்படுத்த தான் இந்த நிகழ்ச்சிய திட்டமிட்டிருக்காங்க.
இந்த food festival-அ Mataam AI Turன்ற புகழ்பெற்ற உணவகம் நடத்துறாங்க. இந்த நிகழ்ச்சி எப்பயும் போல நார்மலான நிகழ்ச்சியா இல்லாம ஒரு கல்யாண வைப்ல நடக்கபோகுது. ஒரு சின்ன ட்விஸ்ட் கல்யாணத்துல மாப்பிள்ளையும் இல்ல பொண்ணு இல்ல !!
இந்த கல்யாண வைப் Food festivalக்கு Dawat- E- Hyderabadனு பேரு வெச்சிருக்காங்க. இந்த நிகழ்வு நவகரா-ல இருக்க மான்போ கன்வென்ஷன் சென்டர்ல ஜூன் 4-ஆம் தேதி நடக்கப்போகுது. இந்த கல்யாணத்துல ஹைதராபாத்துடய உணவு, கலாச்சாரம்னு எல்லாத்தையுமே காட்சிப்படுத்தப் போறாங்க.
என்னதான் இந்த கல்யாணத்துல மாப்பிள்ளை பொண்ணு இல்லனாலும் !! கல்யாணத்துல இருக்க மத்த எல்லா இன்ட்ரஸ்டிங்கான விஷயமும் இங்க இருக்கும். டேபிள்ல பலவிதமான உணவு பொருட்கள், இசைக்குழு நிகழ்ச்சி, பாராத் மட்டுமில்ல இன்னும் சில கலை நிகழ்ச்சிகள்னு எக்கச்சக்க ஏற்பாடுகள் இந்த கல்யாணத்துல இருக்கு..
"இந்த கல்யாணத்த அட்டென்ட் பண்ணும்போது அங்க நடக்கப்போற கவாலி, சூஃபி இசை, மெஹந்தி, இசை நிகழ்ச்சி, ஹைதராபாதுடய நகைச்சுவை நிகழ்ச்சி இத எல்லாத்தையும் பாத்துக்கிட்டு ஹைதராபாத்துடய பாரம்பரியமான உணவு சாப்பிடும் பொழுது அலாதியான சந்தோஷம் கண்டிப்பா கிடைக்கும்"னு இந்த மணமக்கள் இல்லாத கல்யாணத்த நடத்தப்போற நிர்வாகம் சொல்லி இருக்கு.
விதவிதமாய் வித்தியாசமானு !! இந்த நிகழ்ச்சியில கிட்டத்தட்ட 30 வகையான பாரம்பரிய ஹைதராபாத் உணவுகள் பரிமாற போறாங்களாம்.. 'இந்த நிகழ்ச்சிக்காக சாமி சுதாகர், சுனில் பால், அக்பர் பின் தபர், குல்லு தாதா மற்றும் ஃபுர்கான் கிக்'னு பல கலைஞர்கள் வராங்க..
இந்த நிகழ்ச்சிக்கு போய்ட்டு வந்தா கல்யாணத்துக்கு கல்யாண வைப் கிடைக்கும் !! கூடவே விதவிதமான உணவும் சாப்பிடமுடியும் !! ஆன்லைன்ல கிடைக்கிற டிக்கெட்ட புக் பண்ணி போயிடலாமா ???