
உலகின் சிறந்த விஸ்கியைத் தேர்ந்தெடுக்கும் போட்டிகளான விஸ்கீஸ் ஆஃப் தி வேர்ல்ட் அவார்ட்ஸ் (whiskys of the world awards - WOWA) ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட விஸ்கி பிராண்ட்கள் போட்டியிடும்.
இந்தாண்டு நடைப்பெற்ற போட்டியில் இரண்டு தங்க பதக்கங்களை வென்று இந்திய தயாரிப்பு பொருளான இந்திரி என்ற சிங்கிள் மால்ட் உலகின் சிறந்த விஸ்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பிக்காடில்லி டிஸ்டில்லரிஸ் (Piccadilly distilleries) என்ற இந்திய நிறுவனம் இந்த இந்திரி சிங்கிள் மால்ட் விஸ்கியைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தீபாவளி கலெக்டர்ஸ் எடிசன் 2023 (diwali collector's edition) என்ற பெயரில் புது பிராண்ட் சீரியஸ்ஸை அறிமுகப்படுத்தியிருந்தது.
இது உலர்ந்த பழங்கள், வறுக்கப்பட்ட கொட்டைகள், நறுமணமான மசாலா, ஓக், பிட்டர்ஸ்வீட் சாக்லேட் போன்றவற்றைக் கொண்டு தனித்த சுவை மற்றும் நறுமணத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விஸ்கியே தற்போது உலகின் சிறந்த விஸ்கி பட்டத்தை வென்றுள்ளது.
- ர.ராஜ்குமார்.