Karl rock : இந்திய உணவா? அமெரிக்க உணவா? - பறக்கும் விமானத்தில் ஒரு Food Review!

கார்ல் ராக்கின் 17 மணி நேர விமான பயணத்தில், அவர் இரண்டு மதிய உணவு, ஒரு காலை உணவு மற்றும் ஒரு இரவு உணவை சாப்பிட்டுள்ளார்.
Karl rock
Karl rocktimepass

பல்வேறு ஹோட்டல்களுக்குச் சென்று, அங்குள்ள உணவுகளை ருசி பார்த்து, அதன் தரம், சுவை போன்றவற்றை வீடியோவாக வெளியிடும் யூ-டியூப் சேனல்களைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால், விமானத்தில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, விமானத்தில் மற்றும் அந்த நாடுகளில் வழங்கப்படும் உணவுகளைப் பற்றி விமர்சிக்கும் வீடியோக்களும் தற்போது வரத் தொடங்கியுள்ளன.

விமானத்தில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை. உணவில் ஸ்குரூ கிடந்தது, புழு கிடந்தது போன்ற பல்வேறு விமான உணவுகள் குறித்த சர்ச்சை வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகத் தொடங்கியதையடுத்து, சற்று காஸ்ட்லியான விஷயமாக இருந்தாலும் பரவாயில்லை என விமானத்தில் பறந்து விமான உணவுகளைப் பற்றிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் பிரபல ட்ராவல் விலாகர் கார்ல் ராக்.

இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்தியாவில் இருந்து, அமெரிக்கா சென்ற விமானத்தில், 17 மணி நேரம் பயணம் செய்து, இந்திய மற்றும் அமெரிக்க உணவுகளுக்கு இடையேயான வித்தியாசத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோவை ஏராளமானவர்கள் ரசித்து லைக் செய்ததோடு, பல்வேறு கமெண்ட்களையும் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நான் முதல்முறையாக பிரீமியம் எகனாமிக் டிக்கெட்டில், சற்று காஸ்டிலியாக இருந்தாலும் பரவாயில்லை என இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பறக்கிறேன். இதில், எந்த நாட்டின் விமான உணவு சிறப்பாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து வீடியோ வெளியிடுவேன். தற்போது நான் கிளம்பி விட்டேன். காலை உணவாக சிக்கன் டிஷ் மற்றும் பக்கத்திலேயே காய்கறிகளால் செய்யப்பட்ட ஒரு சாலட்டும் இருந்தது. இதை நான் மிகவும் அனுபவித்து சாப்பிட்டேன். அதேபோல, மதிய உணவிலும், ஒரு ஆம்லெட், இறைச்சிகள், காய்கறிகள், ஒரு பிரட் ரோல், பழங்கள், தயிர் போன்றவற்றைக் கொண்டிருந்தது. எகனாமிக் வகுப்பை விட இங்கு உணவு மிகவும் தரமாகவும், சுவையாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது." என்று கூறியுள்ளார்.

"ஆனால், தற்போது, நியூயார்க்கில் எனது இரவு உணவையும், மறுநாள் காலை உணவையும் பார்க்கப் போகிறீர்கள். எனக்கு வழங்கப்பட்ட கோழி இறைச்சி நன்கு பதப்படுத்தப்பட்டு ரப்பர் போல இருந்தது. மேலும், மிகவும் சலிப்பூட்டும் அரிசி, எவ்வித சுவையும் இல்லாத சாஷ் என எவ்வித சுவையும் இல்லாத உணவுதான் கிடைத்தது. எனக்கு அமெரிக்க உணவுகள் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக, அமெரிக்கன் கிரிட்ஸ் (Grits), பிஸ்கட்கள், பார்பிக்யூ போன்றவை நான் விரும்பி உண்ணும் உணவுகள். ஆனால், இங்கு எனக்கு அளிக்கப்பட்டதோ, அமெரிக்க சிறைகளில் வழங்கப்படும் உணவு என்றே எண்ணத் தோன்றுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கார்ல் ராக்கின் 17 மணி நேர விமான பயணத்தில், அவர் இரண்டு மதிய உணவு, ஒரு காலை உணவு மற்றும் ஒரு இரவு உணவை சாப்பிட்டுள்ளார். மேலும், இடையிடையே கொஞ்சம் திண்பண்டங்கள் தின்றும் அவர் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார். இவரது யூ-டியூப் வீடியோவை இதுவரை 8,00,000 பேர் (800k) பார்வையிட்டுள்ளனர். விதவிதமாக கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.

அதில் ஒருவர், “அவர் இந்தியாவில் உள்ள மோசமானவற்றைத் தவிர்த்து, நல்லவற்றை பகிர்ந்துள்ளார்” என்றும், மற்றொருவரோ, “அவர் இந்தியாவை மிகவும் நேசிக்கிறார் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். வேறொருவரோ, “அவர்கள் நறுக்கிய வோக்கோசை அரிசி மீது தூவி அளிக்கும் உணவுக்கு இது பரவாயில்லை” என்றும், “ஆம், விமானத்தில் வழங்கப்படும் உணவு, மளிகைக் கடையில் பதப்படுத்தப்பட்ட உணவு போல இருக்கும்” என்றும்,  விமானத்தில் நல்ல தரமான உணவு வேண்டுமென்றால், அதற்காக நாம் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்றும், அமெரிக்க உணவோடு ஒப்பிடும்போது, இந்திய உணவுதான் மோசம் என்றும், இந்தியா உங்களை மிகவும் கெடுத்து விட்டது என்றும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- மு. ராஜதிவ்யா.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com