பல ரசிகர்களும் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு பிடித்த பிரபலங்களுக்கு பாராட்டுகளையும் உற்சாகமான செய்திகளையும் அனுப்புவது வழக்கமான ஒன்று. பிரபலமான நபர்களுக்கும் சாதாரண மக்களுக்குமான தொடர்பை சமூக ஊடகங்கள் எளிதாக்கியுள்ளது.
இருப்பினும், இதை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் ட்விட்டரில் எழுத்தாளர் ப்ரீத்தி ஷெனாய்க்கு மெசேஜ் செய்து, தனக்கு கவிதை ஒன்று எழுதி தரச் சொல்லியிருக்கிறார். இந்த மெசேஜை தனது டிவிட்டர் பக்கத்தில் எழுத்தாளர் ஷெனாய் பகிர்ந்துள்ளார்.
அந்த மெசேஜின் புகைப்படத்தை பதிவிட்டு, "இப்போது எனக்கு வந்த இந்த செய்தியைப் பாருங்கள்! ஒரு குழந்தை நான் அவருக்கு வீட்டுப் பாடத்தை எழுதி தர வேண்டும்" என்று கூறியிருக்கிறார்!
10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அந்த மெசேஜில், "வணக்கம் மேடம், நான் 10 ஆம் வகுப்பு படிக்கிறேன். 'கருணை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி தர முடியுமா ? இது ஒரு போட்டிக்கானது. உங்களால் உதவ முடிந்தால் நான் "நன்றியுடன்" இருப்பேன்" என்று கூறியுள்ளார்.
அதற்கு எழுத்தாளர் ஷெனாய் பதிலளித்து, "மன்னிக்கவும், உங்களுக்காக உங்கள் வீட்டுப்பாடத்தை என்னால் செய்ய முடியாது" என்று மெசேஜ் செய்துள்ளார். இந்த மெசேஜ் செய்ததை ஃபோட்டோவாக சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இதற்கு பலரும் பல விதமான கமென்ட்ஸ்களைப் பரப்பி வருகின்றனர். இதுவரை இந்த பதிவு 8000ற்கும் மேற்பட்ட பார்த்துள்ளனர்.
"ஹாஹாஹா.. குழந்தையை chatgpt-ஐ கேட்கச் சொல்லுங்கள். ஆனால் அவருடைய தைரியத்தைக் கண்டு வியப்படைகிறேன்!", "தைரியமான மாணவர்" என்றும், "சிலர் உதவி செய்யலாம்" என்றும் கமென்ட்ஸ் செய்துள்ளனர்.